உலகின் கவனத்தை ஈர்த்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்சனை இரு மாநிலங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு பிரச்சனையாக கடந்த பல வருடங்களாக இருந்தது. பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பின்னர், அந்த தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாததால் ஏற்பட்ட தமிழர்களின் கொந்தளிப்பு காரணமாக இந்த பிரச்சனை அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது
இந்த நிலையில் காவிரி பிரச்சனை தீரும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்ற போராட்டத்தால் தற்போது இந்த பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமிபத்தில் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம் நடத்தி அரசியல் கட்சிகள் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தனர். இந்த போராட்டம் குறித்து உலகின் முன்னணி ஊடகமான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் முக்கிய செய்தியாக வெளிவந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் சென்னை அணி விளையாட வந்தபோதிலும் தங்களுக்கு விருப்பமான சிஎஸ்கே அணியின் விளையாடை விட விவசாயிகளின் நலனே முக்கியம் என்று கருதியதையும், ஐபிஎல் போட்டியை நிறுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை உலகின் கவனத்துக்கு கொண்டு சென்றதையும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக காவிரி பிரச்சனை குறித்து தற்போது சர்வதேச விளையாட்டு வீரர்கள் தங்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருவதால் உலகம் முழுவதும் தமிழர்களின் இந்த பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று நடைபெற்ற பிரதமருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட்டுக்கு வந்துள்ளது. எனவே மத்திய அரசு இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதால் மிக விரைவில் காவிரியில் தமிழர்களுக்கு ஆதரவாக நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments