உலகின் கவனத்தை ஈர்த்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம்

  • IndiaGlitz, [Thursday,April 12 2018]

தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்சனை இரு மாநிலங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு பிரச்சனையாக கடந்த பல வருடங்களாக இருந்தது. பின்னர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்த பின்னர், அந்த தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாததால் ஏற்பட்ட தமிழர்களின் கொந்தளிப்பு காரணமாக இந்த பிரச்சனை அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது

இந்த நிலையில் காவிரி பிரச்சனை தீரும் வரை சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த விடமாட்டோம் என்ற போராட்டத்தால் தற்போது இந்த பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமிபத்தில் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டம் நடத்தி அரசியல் கட்சிகள் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தனர். இந்த போராட்டம் குறித்து உலகின் முன்னணி ஊடகமான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் முக்கிய செய்தியாக வெளிவந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பின்னர் சென்னை அணி விளையாட வந்தபோதிலும் தங்களுக்கு விருப்பமான சிஎஸ்கே அணியின் விளையாடை விட விவசாயிகளின் நலனே முக்கியம் என்று கருதியதையும், ஐபிஎல் போட்டியை நிறுத்துவதன் மூலம் இந்த பிரச்சனையை உலகின் கவனத்துக்கு கொண்டு சென்றதையும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக காவிரி பிரச்சனை குறித்து தற்போது சர்வதேச விளையாட்டு வீரர்கள் தங்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருவதால் உலகம் முழுவதும் தமிழர்களின் இந்த பிரச்சனை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று நடைபெற்ற பிரதமருக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டம் டுவிட்டரில் உலக அளவில் டிரெண்ட்டுக்கு வந்துள்ளது. எனவே மத்திய அரசு இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதால் மிக விரைவில் காவிரியில் தமிழர்களுக்கு ஆதரவாக நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தாயின் பேட்டியை பார்த்து கதறிய ஸ்ரீரெட்டி

தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே.

ஸ்ரீரெட்டி லீக் செய்த அடுத்த பிரபலம்: அதிர்ச்சியில் டோலிவுட்

நடிகை ஸ்ரீரெட்டி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை அவ்வப்போது லீக் செய்யவுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

நம்மைவிட அவர்க்ள் உயர்ந்தவர்கள்; சத்யராஜ்

காவிரி மேலாண்மை வாரியம் அமைய கடந்த சில நாட்களாக திரையுலகினர்களின் போராட்டம் தீவிரமாக உள்ளது. குறிப்பாக பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் ஆகியோர்களின் போராட்டம் உணர்ச்சிப்பெருக்காக உள்ளது.

கர்நாடக மக்களுக்கு நன்றி கூறிய சிம்பு

ஏப்ரல் 11ஆம் தேதி கன்னட மக்கள் அங்கு வாழும் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து இருமாநில மக்களுக்கும் இடையே எந்தவித வெறுப்பும் இல்லை என்று நிரூபியுங்கள் என்று சிம்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்

ஒரே படத்தில் நயன்தாரா-தமன்னா

முதல்முறையாக நயன்தாரா, தமன்னா ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.