'செத்துப்போ' என கூறிய காதல் மனைவி, தூக்கில் தொங்கிய கணவன்: திருமணமான இரண்டே மாதத்தில் சோகம்
- IndiaGlitz, [Tuesday,July 07 2020]
திருமணமான இரண்டே மாதங்களில் காதல் மனைவி ’செத்துப்போ’ என கூறியதை அடுத்து மனம் உடைந்த கணவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் அருகே கீழ்மொணவூர் என்ற பகுதியைச் சேர்ந்த அஜய்குமார் என்ற 30 வயது இளைஞரும். அர்ச்சனா என்ற இளம்பெண்ணும் காதலித்தனர். இவர்கள் வீட்டை எதிர்த்து கடந்த மே மாதம் எட்டாம் தேதி திருமணம் செய்து கொண்டு அருகில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பித்தனர்.
ஆனால் திருமணமான ஒரு சில நாட்களிலேயே அர்ச்சனா மற்றும் அஜய்குமாருக்கும் இடையே தகராறு வந்தது. ஒரு கட்டத்தில் அர்ச்சனா தனது தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டார். ஒரு சில தினங்கள் கழித்து அஜய்குமார் அர்ச்சனாவின் தாய் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் தன்னுடைய தாயார் பேச்சை தான் கேட்பேன் என்றும் இனிமேல் தங்களுடன் குடும்பம் நடத்த வர மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
நீ வராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அஜய்குமார் கூறியபோது ’செத்துப் போ’ என அர்ச்சனா கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அஜய்குமார் வீட்டிற்கு வந்து தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் அஜய்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
பின்னர் அஜய்குமார் மொபைல் போனில் ஒரு வீடியோ இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த வீடியோவில் தனது மனைவி தனது மாமியார் பேச்சைக் கேட்டு தன்னை இளக்காரமாக பேசியதாகவும் ’செத்துப்போ’ என்று கூறியதாகவும் அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் திருமணமான இரண்டே மாதங்களில் புதுமாப்பிள்ளை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.