திருமணம் முடிந்தவுடன் சாப்ட்வேர் எஞ்சினியர்கள் கொடுத்த பரிசு: கிராம மக்கள் நெகிழ்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக திருமணம் செய்யும் புதுமண தம்பதிகளுக்கு திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து, பரிசுகள் கொடுப்பார்கள். ஆனால் கோவை அருகே இன்று நடந்த திருமணத்தில், திருமணம் செய்த தம்பதிகள் அப்பகுதி ஏழை எளியவர்களுக்கு கொடுத்த பரிசால் அந்த பகுதியில் பெரும் நெகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் என்பவருக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக திட்டமிட்டபடி திருமணம் நடத்த முடியவில்லை.
இந்த நிலையில் இன்று இவர்கள் இருவருக்கும் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் திருமணம் மிக எளிமையாக நடந்தது. பெங்களூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் எஞ்சினியர்களாக பணி புரியும் இவர்கள் தங்கள் திருமணத்தை பிரமாண்டமாக பல லட்சம் செலவில் நடத்த திட்டமிட்டனர். ஆனால் சூழ்நிலை காரணமாக எளிமையான திருமணத்தை முடித்தனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்தவுடன் திருமண செலவிற்காக வைத்திருந்த பணத்தை அந்த பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை போன்ற உணவு பொருட்களை புதுமண தம்பதிகள் வழங்கினர். மணக்கோலத்தில் இந்த தம்பதிகள் தங்கள் கிராமத்து மக்களுக்கு கொடுத்த இந்த பரிசினை பார்த்து அந்த கிராமத்து மக்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் மனதார வாழ்த்தியது பெரும் நெகிழ்ச்சியாக இருந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments