தற்கொலை செய்து கொண்ட ஃபேஸ்புக் காதல் ஜோடி: உருக்கமான கடிதம்

  • IndiaGlitz, [Wednesday,November 28 2018]

ஃபேஸ்புக்கில் பழகி காதலித்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த நந்தகுமார் என்ற 19 வயது இளைஞரும், திருப்பூரை சேர்ந்த சத்யப்ரியா என்ற 21 வயது இளம்பெண்ணும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி நண்பரானார்கள். பின்னர் நாளடைவில் நட்பு காதலாக மாறி இருவரும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இருவீட்டார்களும் காதல் ஜோடியை ஒதுக்க வைக்க இருவரும் தனியாக வீடு அமர்த்தி தங்களுடைய புது இல்வாழ்க்கையை தொடங்கினர்.

இந்த நிலையில் இன்று காலை வெகுநேரம் அவர்களுடைய வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது நந்தகுமார் தூக்கில் தொங்கியும், சத்யப்ரியா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அந்த வீட்டில் காதல் ஜோடி இருவரும் சேர்ந்து எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில், 'அன்புள்ள எங்கள் சொந்தங்கள், நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நாங்கள் இருவரும் இந்த உலகத்தை விட்டு பிரிகிறோம். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் சந்தோ‌ஷமாக செல்கிறோம். அதனால் உறவினர்களும், நண்பர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினால் போதும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமான ஆறே மாதங்களில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

More News

தளபதி 63: இன்று முதல் தொடங்கிய முக்கிய பணி

தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது என்பது தெரிந்ததே.

மன்னிப்பு கேட்க முடியாது, உத்தரவாதமும் தரமுடியாது: ஏ.ஆர்.முருகதாஸின் தைரியமான முடிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் அரசின் விளம்பர பொருட்களை விமர்சிக்கும் வகையில் காட்சி இருந்ததால் அந்த காட்சிகளுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

என்னை பாஜகவில் இருந்து நீக்க தமிழிசைக்கு உரிமையில்லை: காயத்ரி ரகுராம்

சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கான விளக்கத்தை காயத்ரி தெளிவாக கூறிவிட்டபோதிலும் தொடர்ந்து இதுகுறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வருகிறது.

திரைப்படம் ஆகிறது சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் இருந்தவர் நடிகர் சந்திரபாபு.

'2.0' சிட்டிக்கு வாழ்த்து கூறிய 'பேட்ட'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' மற்றும் 'பேட்ட' ஆகிய இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் நிகழ்வு நீண்ட வருடங்களுக்கு பின்னர் தற்போது தான் நடக்கின்றது.