close
Choose your channels

நிச்சயதார்த்தம் முடிந்ததும் ஊர் சுற்றும் வருண் தேஜ், லாவன்யா திரிபாதி… வைரல் புகைப்படம்!

Thursday, June 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர், நடிகைகளாக இருந்து தற்போது நிச்சயதார்த்தம் செய்துகொண்ட நடிகர் வருண் தேஜ் மற்றும் லாவன்யா திரிபாதி இருவரும் ஐரோப்பிய நாட்டில் தங்களது விடுமுறையை கழித்து வரும் நிலையில் அவர்களுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் அண்ணன் மகனான நடிகர் வருண் தேஜ் தற்போது தெலுங்கில் முக்கிய நடிகராக வளர்ந்துள்ளார். இந்நிலையில் ‘மிஸ்டர்’ மற்றும் அந்தரிஷம்’ திரைப்படங்களில் ஒன்றாக நடித்த இளம் நடிகை லாவன்யா திரிபாதியை காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில் அவர்களுடைய நிச்சயதார்த்தம் கடந்த ஜுன் 9 ஆம் தேதி நடைபெற்றது.

முக்கியப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட இந்த விழாவில் நடிகர் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், அல்லு அர்ஜுன் போன்றோர் கலந்து கொண்டனர். இவர்களுடைய நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் படு வைரலாகியது. மேலும் நிச்சயதார்த்தத்தில் அணிந்திருந்த மோதிரம் குறித்த தகவல் கூட பரபரப்பாக பேசப்பட்டது.

அதாவது நடிகர் வருண் தேஜ் அணிந்திருந்த மோதிரம் வைரம் மற்றும் பிளாட்டினத்தால் செய்யப்பட்டது என்றும் நடிகை லாவன்யா திரிபாதி அணிந்திருந்த மோதிரம் பெரிய வைரத்தால் செய்யப்பட்டது என்றும் கூறப்பட்ட நிலையில் ஒவ்வொரு மோதிரமும் ரூ.25 லட்சம் விலை மதிப்புடையது. இது ஹைதராபாத்திலுள்ள ஒரு 2 பிஹெச் வீட்டின் விலையை விட உயர்வானது என்றெல்லாம் ஊடகங்களில் தகவல்கள் பரவின.

இதையடுத்து காதல் ஜோடிகளாக இருந்து தற்போது நிச்சயதார்த்தம் செய்துகொண்ட இருவதும் ஐரோப்பியாவிற்கு சென்றுள்ள நிலையில் அதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் இவர்களுடைய திருமணம் இத்தாலியில் நடத்துவதற்கு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில் நடிகர் வருண் தேஜ் ஆக்ஷன் திரைப்படமான ‘கண்டீவதாரி அர்ஜுனா’ திரைப்படத்தில் இணைந்துள்ளார். நடிகை லாவன்யா திரிபாதி நடித்த 'புலிமேகா' வெப் சீரிஸ் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment