காட்டுத்தீயில் சிக்கி கருகிப்போன 100 நாட்களே ஆன புதுமண தம்பதி
Send us your feedback to audioarticles@vaarta.com
தேனி குரங்கணி காட்டுத்தீயில் டிரெக்கிங் சென்ற மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டதை அடுத்து அவர்களை உயிருடன் மீட்கும்பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த தீ விபத்தில் இதுவரை ஒன்பது பேர் தீயில் கருகி மரணம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மீதி மூன்று பேர்களில் ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த ஒருபுதுமண தம்பதி விவேக்-திவ்யா என்பதும் மற்றொருவர் இந்த தம்பதியின் நண்பர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
துபாயில் பணிபுரிந்து அந்த விவேக், கல்லூரி பேராசிரியரான திவ்யாவை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் 100வது திருமண நாளை கொண்டாடிய இந்த தம்பதிகள் இதனை கொண்டாடும் விதத்தில் டிரெக்கிங் சென்றுள்ளனர். இதனை அவர்கள் தங்களுடைய ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளனர்.,
பச்சை பசேல் என்று இருந்த பசுமையை ரசித்து கொண்டே டிரெக்கிங் சென்ற இந்த தம்பதியினர் எதிர்பாராமல் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி கருகி உயிரிழந்தனர். இவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இவரது நண்பரும் உயிரிழந்தார். மணமாகி 100 நாட்களே ஆன இந்த புதுமண தம்பதிகளின் மரணம், அவர்களது உறவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com