காட்டுத்தீயில் சிக்கி கருகிப்போன 100 நாட்களே ஆன புதுமண தம்பதி

  • IndiaGlitz, [Monday,March 12 2018]

தேனி குரங்கணி காட்டுத்தீயில் டிரெக்கிங் சென்ற மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிக்கி கொண்டதை அடுத்து அவர்களை உயிருடன் மீட்கும்பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த தீ விபத்தில் இதுவரை ஒன்பது பேர் தீயில் கருகி மரணம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மீதி மூன்று பேர்களில் ஈரோடு கவுந்தம்பாடியை சேர்ந்த ஒருபுதுமண தம்பதி விவேக்-திவ்யா என்பதும் மற்றொருவர் இந்த தம்பதியின் நண்பர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

துபாயில் பணிபுரிந்து அந்த விவேக், கல்லூரி பேராசிரியரான திவ்யாவை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் 100வது திருமண நாளை கொண்டாடிய இந்த தம்பதிகள் இதனை கொண்டாடும் விதத்தில் டிரெக்கிங் சென்றுள்ளனர். இதனை அவர்கள் தங்களுடைய ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளனர்.,

பச்சை பசேல் என்று இருந்த பசுமையை ரசித்து கொண்டே டிரெக்கிங் சென்ற இந்த தம்பதியினர் எதிர்பாராமல் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி கருகி உயிரிழந்தனர். இவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட இவரது நண்பரும் உயிரிழந்தார். மணமாகி 100 நாட்களே ஆன இந்த புதுமண தம்பதிகளின் மரணம், அவர்களது உறவினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

 

More News

இரவோடு இரவாக மூடப்பட்ட டிரெக்கிங் நிறுவனம்? நிறுவனர் தலைமறைவு?

நேற்று தேனி அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை ஒருபுறம் மீட்கும் பணியில் இந்திய விமானப்படையும், தீயணைப்பு துறையினர்களும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

விக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்?

சீயான் விக்ரமின் மகன் துருவ், பாலா இயக்கி வரும் 'வர்மா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற்று வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

மனதைப் பிழியும் சோகம்: காட்டுத்தீ விபத்து குறித்து கமல்

தேனி அருகேயுள்ள மலைப்பகுதியான குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை, கமாண்டோ படை, தீயணைப்பு படை மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

தல, தளபதி குறித்து சிம்பு கூறியது என்ன?

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக சமீபத்தில் கலந்து கொண்ட சிம்பு, தல அஜித் மற்றும் தளபதி விஜய் குறித்த தனது கருத்தை தெரிவித்தார்.

தேனி அருகே பயங்கர காட்டுத்தீ: 8 பேர் பலி, மீட்கப்பட்டவர்களின் விபரம்

தேனி அருகேயுள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் விபத்தில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட சுமார் 40 மாணவிகள் சிக்கி கொண்டனர்.