விஜயகாந்த் வீட்டுக்கு வந்த புதிய விருந்தினர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கேப்டன் விஜயகாந்த் தற்போது தீவிர அரசியலில் இல்லாதபோதிலும் அவ்வப்போது மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு இன்று முதல் ஒரு புதிய விருந்தினர் வந்துள்ளர்.
விஜயகாந்த் வீட்டில் லட்சுமி என்ற பசு வளர்கிறது. விஜயகாந்த் வீட்டினர் அனைவரும் பாசத்துடன் வளர்த்து வரும் இந்த பசு இன்று கன்றை ஈன்றுள்ளது. இதுகுறித்து விஜயகாந்த் தனது சமூக வலைத்தளத்தில், 'எங்கள் வீட்டு லட்சுமி (பசு), இன்று பசுங்கன்றை ஈன்றது. அதற்கு அட்சயா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்...என்று பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவர் பதிவு செய்துள்ள புகைப்படங்களில் விஜயகாந்த், அவருடைய மனைவி பிரேமலதா ஆகியோர் அந்த கன்றை கொஞ்சியபடி இருக்கும் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
எங்கள் வீட்டு லட்சுமி (பசு), இன்று பசுங்கன்றை ஈன்றது. அதற்கு அட்சயா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தோம்... pic.twitter.com/NAppcZOKmv
— Vijayakant (@iVijayakant) August 27, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com