கங்கை ஆற்றில் மிதந்துவந்த பிஞ்சு குழந்தை… முதல்வர் எடுத்த அதிரடி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் கங்கை ஆறு குறித்த எதிர்மறையான செய்திகள் ஊடகங்களில் வரிசை கட்டி நிற்கின்றன. அந்த வகையில் தற்போது காசிப்பூர்- தாத்ரி காட் பகுதிக்கு அருகே மரப்பெட்டி ஒன்றில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தை ஒன்று மிதந்து வந்துள்ளது. அந்தக் குழந்தையை அரசாங்கமே வளர்க்கும் என உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து உள்ளார்.
காசிப்பூர் அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது புதிய பெட்டி ஒன்று ஆற்றில் மிதந்து வந்ததாகவும் அந்த பெட்டியில் சிவப்பு பட்டுத்துணியால் சுற்றப்பட்ட பெண் குழந்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெட்டிக்குள்ளே காளி தெய்வத்தின் புகைப்படமும் அந்தக் குழந்தை பிறந்த நேரம், தேதி குறிப்பிட்ட ஒரு காகிதமும் இருந்துள்ளது. இதைப் பார்த்த மீனவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்தக் குழந்தையை அரசாங்கமே வளர்க்கும் என முதல்வர் யோகி தெரிவித்து உள்ளார். தற்போது அந்தக் குழந்தைக்கு “கங்கா“ எனப் பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout