நியூசிலாந்து அணிக்கு இவ்வளவு திறமையா? இப்பவே பீதியை கிளப்பும் நெட்டிசன்ஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிவரும் இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு படுதோல்வி அடைந்திருக்கிறது. இந்திய அணியை எதிர்த்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை வெற்றிப்பெறாத பாகிஸ்தான் கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஒரு விக்கெட் கூட இழப்பில்லாமல் அமோக வெற்றிப் பெற்றிருக்கிறது. இதனால் இந்திய ரசிகர்கள் பீதியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் டீம் பற்றிய சில தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது டி20 உலகக்கோப்பை போட்டியில் மட்டுமல்ல வேறெந்த முக்கியப் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி இதுவரை வெற்றிப்பெற்றதில்லை. அதனால் வரும் 31ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கும் இடையே நடைபெற இருக்கும் போட்டியின் முடிவு என்னவாகும் என்பதே தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. ஆனால் இந்த தொடருக்கான லீக் போட்டியில் கேப்டன் டேனியல் வெட்டோரி தலைமையிலான நியூசிலாந்து அணியிடம் இந்தியா படு மோசமாக தோற்றுப்போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது. இதைத்தவிர உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளிலும் கோலி தலைமையிலான இந்திய அணி வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியிடம் மீண்டும் தோல்வியையே தழுவியிருக்கிறது.
இதனால் நியூசிலாந்து அணியை எதிர்க்கொள்ள இந்திய வீரர்கள் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தற்போது நடைபெற்றுவரும் லீக் போட்டிகளில் நியூசிலாந்து ஏற்கனவே ஒருமுறை பாகிஸ்தானுடன் மோதி தோல்வியை தழுவியது. இந்நிலையில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த இந்தியா நியூசிலாந்து அணியை எதிர்த்து வரும் 31ஆம் தேதி களம் இறங்கவுள்ளது.
இதனால் நியூசிலாந்து அணியுடன் மோதி இதுவரை வெற்றிப்பெறாத இந்தியா தனது தோல்வி வரலாற்றை முறியடிக்குமா? டி20 உலகக்கோப்பை போட்டியில் அரை இறுதிக்குள் நுழைய நியூசிலாந்தை வீழ்த்துமா? என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments