இந்திய அணிக்கு அடித்த ஜாக்பாட்… அரை இறுதிக்கு முன்னேறுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா முதல் போட்டியிலேயே படு மோசமாக தோல்வியைத் தழுவியது. இதையடுத்து அடுத்துவரும் போட்டியில் வெற்றிப்பெற்றால் மட்டுமே அரைஇறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் சூப்பர் 12 டீமில் ‘பி‘ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா அடுத்து நியூசிலாந்து அணியுடன் வரும் 31 ஆம் தேதி மோதவுள்ளது. இதற்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான மார்டின் கப்தில் கட்டை விரல் காயம் காரணமாக இந்தியாவுடனான போட்டியில் இருந்து விலகியிருக்கிறார். அதேபோல இன்னொரு முக்கிய வீரரான லாக்கி ஃபெர்க்யூசன் தசைப்பிடிப்பு காரணமாக டி20 தொடரில் இருந்தே விலகியிருக்கிறார்.
இதையடுத்து நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில் மற்றும் லாக்கி ஃபெர்க்யூசன் இல்லாதது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. மேலும் சூப்பர் 12 “பி’‘ பிரிவை பொறுத்தவரை நியூசிலாந்து மட்டுமே டஃபான அணியாக கருதப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி நியூசிலாந்துடன் வெற்றிப்பெற்று, அரை இறுதிக்குள் நுழைந்துவிட்டால் பின்பு நமீபியா, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளை எளிதாக சமாளித்து விடலாம் என்றும் கணிப்புகள் இருந்துவருகின்றன.
இப்படியிருக்கும்போது இந்திய அணியில் சில மாற்றங்களை செய்தே ஆகவேண்டும் அப்போதுதான் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற முடியும். இல்லையென்றால் சூப்பர் 12 போட்டிகளின்போதே இந்திய அணி சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டியிருக்கும் என்றும் சில மூத்த வீரர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக பந்துவீச்சில் ஈடுபடாமல் இருக்கும் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சும் அடிபடுகிறது. அதேபோல புவனேஸ்வர் குமார், வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரையும் மாற்றிவிட்டு அதற்குப் பதிலாக இஷான் கிஷன் மற்றும் அஸ்வினை அணிக்குள் கொண்டுவரலாம் என்றும் ஆலோசனை கருத்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அணி தனது பிளேயிங் 11-ஐ மாற்றுமா? என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com