வானத்தைத் நோக்கி சரமாரி துப்பாக்கிச்சூடு… போர்க்களமாக மாறிய புத்தாண்டு கொண்டாட்டம்… அதிர்ச்சி வீடியோ!!!
- IndiaGlitz, [Saturday,January 02 2021]
கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பித்த கொரோனா பரவல் இன்றுவரை தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பெரும்பாலான உலக நாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவித்து இருந்தன. ஆனால் தற்போது லெபனான் நாட்டில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டம் மற்ற உலக நாடுகளை கடும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்தப் புத்தாண்டின்போது லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரம் முழுவதும் உள்ள மக்கள் துப்பாக்கி சூடு நடத்தி புத்தாண்டை கொண்டாடி இருக்கின்றனர். மேலும் இவர்கள் வானத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியால் ஒட்டுமொத்த வானமும் போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சில அதிர்ச்சி வீடியோக்களும் வெளியாகி இருக்கின்றன.
அதோடு இந்தத் துப்பாக்கிச் சூட்டின்போது லெபனான் நோக்கி வனாத்தில் பறந்து கொண்டு இருந்த 4 விமானங்களிலும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து விட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விமானங்கள் அனைத்தும் லெபனான் மத்திய கிழக்கு ஏர்லைன்ஸ்க்கு சொந்தமானது என்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல அந்நாட்டின் கிழக்கு பகுதியான பால்பெர்க்கிலும் துப்பாக்கி சூடு நடத்தி புத்தாண்டை கொண்டாடி இருக்கின்றனர். இந்தக் கொண்டாட்டத்தின்போது அகதிகள் முகாமில் தங்கி இருந்த சிரிய நாட்டை சேர்ந்த ஒருவர் மீது குண்டுகள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
Classic beirut gunfire last night. To quote a friend: "who needs Iron Dome when you've got this?"
— Sebastian Shehadi (@seblebanon) January 1, 2021
Jokes asides, dozens of people get injured every NYE from stray celebratory bullets. pic.twitter.com/HxF7YdoEVK
One of the bullets hit a plane at Beirut Airport pic.twitter.com/ZeHCqcqCwo
— Sebastian Shehadi (@seblebanon) January 1, 2021