இன்று ஒருநாள் குடித்துவிட்டு வண்டி ஓட்டினால்...? என்னென்ன நடக்கும் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
குளித்து விட்டு கோயிலுக்கு சென்றால் அது தமிழ் புத்தாண்டு என்றும், குடித்துவிட்டு கும்மாளம் போட்டால் அது ஆங்கில புத்தாண்டு என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வரும் நிலையில் இன்றைய புத்தாண்டு தினத்தில் பெரும்பாலானோர் நட்சத்திர ஓட்டல்களிலும் பார்களிலும் குடிக்கும் திட்டத்தை வைத்திருப்பார்கள்.
புத்தாண்டு தினத்தில் மது அருந்திவிட்டு மகிழ்ச்சியாக இருப்பது கூட தவறில்லை. ஆனால் இன்று ஒருநாள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டினால் வாழ்க்கையே திசை மாறும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.
புத்தாண்டு அன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு மற்றும் வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தடையில்லாச் சான்றிதழ் கிடைக்காது என்று சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தாண்டு தினத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கவே இந்த அதிரடி நடவடிக்கை என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுவர்களை கண்டுபிடிக்க வாகன சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் இந்த மையங்களில் இருப்பதாகவும் கூறப்படுவதால் குடித்துவிட்டு இன்று வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட மது அருந்தாமல் கொண்டாடலாம் என்றும் ஒருவேளை மது அருந்தினால் வாகனம் ஓட்டாமல் வீடு செல்லவும் புத்தாண்டு தினத்தில் போலீஸ், கேஸ் என்று சிக்காமல் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments