சென்னையின் நீர் பாதுகாப்புக்காக புதிய நீர்க்குழுமம்- பட்ஜெட்டில் ஓபிஎஸ் அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் ஆண்டுதோறும் கோடை காலங்களின்போது குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பாகவே மாறிவிட்டது. இந்நிலையில் சென்னை மாநகரில் நீர் வளங்களை திட்டமிட்டு நீர் பாதுகாப்பை மேம்படுத்த ஏதுவாக, புதிதாக நீர்க் குழுமம் தொடங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை இன்று தமிழகச் சட்டபேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், சென்னை மாநகரின் வளர்ச்சிக்காக உலக வங்கியின் துணையுடன் திட்டம் வகுப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார். இதன்படி பொதுச் சுகாதாரம், போக்குவரத்து மற்றும் குடிநீர் ஆகியவற்றில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.
மேலும் சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மறுசீரமைக்கப்பட்டு உள்ளது. அதோடு சென்னை மாநகரின் நீர்வளங்களை திட்டமிட்டு நீர் பாதுகாப்பை மேம்படுத்த புதிய நீர்க் குழுமம் உருவாக்கப்படும் என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments