சீனாவை அடுத்து கஜகஜஸ்தானில் புதிய நோய்த்தொற்று: எச்சரிக்கை விடுக்கும் WHO!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கஜகஜஸ்தானில் குடியிருக்கும் சீன மக்களுக்கு நேற்று ஒரு ரகசிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் கஜகஜஸ்தானில் உள்ள சீன மக்கள் பத்திரமாக இருந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டது. மேலும் அந்நாட்டில் ஒரு புதிய நோய்த்தொற்று பரவி வருகிறது என்றும் அதில் 1700 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்ற தகவலும் கூறப்பட்டு இருந்தது. இதுகுறித்து உலகச் சுகாதார நிறுவனம் கஜகஜஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டபோது அப்படி ஒரு பெருந்தொற்று எங்கள் நாட்டில் பரவவே இல்லை என்ற தகவலை வெளிப்படுத்தி இருந்தது.
இந்த விவகாரத்தைக் குறித்து ஆய்வு மேற்கொண்ட உலகச் சுகாதார அமைப்பு, கஜகஜஸ்தானில் பரவுவது நிமோனியா கொரோனா வைரஸ் ஆக இருக்கலாம் என்ற சந்தேகத்தை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 மாதங்களில் உலகையே புரட்டிப் போட்டு இருக்கிறது. தொடர்ந்து அதன் மரபணுக்களும் மாற்றம் அடைந்து வருவது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் கஜகஜஸ்தானில் நிமோனியா தீவிரமாக பரவிவருவதாகக் கூறப்படுகிறது. சீனத் தூதரகம் அந்நாட்டில் உள்ள சீன மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தாலும் அந்த அறிவிப்பை கஜகஜஸ்தான் அரசு மறுத்து வருகிறது.
இந்த விவகாரத்தில் தற்போது உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் அந்நாட்டில் பரவியிருப்பது நிமோனியா கொரோனா வைரஸாக இருக்கலாம் எனவும் WHO சார்பில் கூறப்படுகிறது. அந்த அமைப்பின் அவசரப் பிரிவுக்கான நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரியான் “இதில் பல சோதனை முடிவுகள் தவறுதலாக நிமோனியா என வந்திருக்கலாம். உண்மையில் அவை கொரோனா வைரஸுடன் தொடர்புடையவை’‘ எனக் கூறியிருக்கிறார். இதுவரை அந்நாட்டில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறது. உயிரிழப்புகள் 264 ஆக பதிவாகி இருக்கிறது. ஆனல் சீனத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் 1700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments