தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில்… மரபணு மாறிய அதிவேக கொரோனா வைரஸ்!!!

  • IndiaGlitz, [Tuesday,December 15 2020]

 

இங்கிலாந்து நாட்டில் மரபணுவில் மாற்றம் ஏற்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் படு வேகமாக பரவி வருகிறது என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதனால் தலைநகர் லண்டனில் 3 அடுக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் அமெரிக்க தயாரிப்பான ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு கடந்த 7 ஆம் தேதி முதல் அந்நாட்டின் சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி விட்டது.

இந்நிலையில் தெற்கு லண்டனின் பல்வேறு பகுதிகளில் தற்போது மரபணுவில் மாற்றம் ஏற்பட்ட அதிவேக கொரோனா வைரஸ் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரிகளை விட புதிய வகை கொரோனா வைரஸ் படுவேகமாக மக்கள் மத்தியில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதில் இருக்கும் ஒரே நிம்மதி புதிதாக பரவி வரும் மரபணு மாறிய கொரோனா வைரஸ் பெரிய அளவிலான உடல் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் புதிய மரபணு மாறிய கொரோனா வைரஸை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. இருப்பினும் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தெற்கு லண்டனில் ஹெட்ஃபோர்ட்ஷையர், எசெக்ஸ் போன்ற பகுதிகளில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள் வெளியில் யாரையும் சந்தித்துப் பேசவோ அல்லது உணவகத்தில் உணவருந்தவோ, ஹோட்டல்களில் தங்கவோ அனுமதி மறுக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை உலகையே கதிகலங்க வைத்த கொரோனா வைரஸ்க்கு தற்போதுதான் ஃபைசர், ஸ்புட்னிக் வி போன்ற கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸின் மரபணு மாறினால் ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்டுள்ள கொரோனா தடுப்பூசி வேலைச் செய்யாமல் பேய்விடுமோ என்ற அச்சம் விஞ்ஞானிகள் மத்தியிலும் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. இதனால் புதிய மரபணு மாறிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இங்கிலாந்தின் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

More News

என் விளையாட்டு இனிமே எப்படி இருக்கும்ன்னு பாருங்க: அர்ச்சனாவிடம் சவால்விட்ட ஆரி!

பிக்பாஸ் வீட்டில் எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதனை போட்டியாளர்கள் ஸ்போர்ட்டிவ்வாக விளையாடாமல் பிரச்சனை செய்து விளையாடுவதே போட்டியாளர்களின் எண்ணமாக உள்ளது 

சரியான நேரத்தில் இணையும் ஹரி-அருண்விஜய்: ஆக்சன் விருந்து நிச்சயம்!

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண்விஜய் இணைந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள்

இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா? சமூக வலைத்தளங்களின் வாக்கெடுப்பு!

பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேஷன் படலம் நடந்த நிலையில் நேற்றைய நாமினேஷனில் மொத்தம் ஏழு பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் தலைவர் ரம்யா மற்றும் பாலாஜி, கேபி ஆகிய

பரிசுக்கு பதிலாக கொரோனா வைரஸை வழங்கிய கிறிஸ்துமஸ் தாத்தா… பரிதாப சம்பவம்!!!

இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. இந்த விழாவின்போது கிறிஸ்துமஸ் தாத்தா பரிசுப் பொருட்களை கொடுப்பார்

கல்யாணத்தில் டான்ஸ்… கடுப்பான மணப்பெண் திருமணத்தையே நிறுத்திய சம்பவம்!!!

உத்திரப்பிரேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் மணப்பெண் ஒருவர் தன்னுடைய கல்யாணத்தில் நடந்த ஒரு சிறு நிகழ்வால் திருமணத்தையே நிறுத்தி இருக்கிறார்.