தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில்… மரபணு மாறிய அதிவேக கொரோனா வைரஸ்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இங்கிலாந்து நாட்டில் மரபணுவில் மாற்றம் ஏற்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் படு வேகமாக பரவி வருகிறது என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதனால் தலைநகர் லண்டனில் 3 அடுக்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் அமெரிக்க தயாரிப்பான ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு கடந்த 7 ஆம் தேதி முதல் அந்நாட்டின் சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி விட்டது.
இந்நிலையில் தெற்கு லண்டனின் பல்வேறு பகுதிகளில் தற்போது மரபணுவில் மாற்றம் ஏற்பட்ட அதிவேக கொரோனா வைரஸ் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாதிரிகளை விட புதிய வகை கொரோனா வைரஸ் படுவேகமாக மக்கள் மத்தியில் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதில் இருக்கும் ஒரே நிம்மதி புதிதாக பரவி வரும் மரபணு மாறிய கொரோனா வைரஸ் பெரிய அளவிலான உடல் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் புதிய மரபணு மாறிய கொரோனா வைரஸை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது. இருப்பினும் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தெற்கு லண்டனில் ஹெட்ஃபோர்ட்ஷையர், எசெக்ஸ் போன்ற பகுதிகளில் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள் வெளியில் யாரையும் சந்தித்துப் பேசவோ அல்லது உணவகத்தில் உணவருந்தவோ, ஹோட்டல்களில் தங்கவோ அனுமதி மறுக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை உலகையே கதிகலங்க வைத்த கொரோனா வைரஸ்க்கு தற்போதுதான் ஃபைசர், ஸ்புட்னிக் வி போன்ற கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்நிலையில் கொரோனா வைரஸின் மரபணு மாறினால் ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்டுள்ள கொரோனா தடுப்பூசி வேலைச் செய்யாமல் பேய்விடுமோ என்ற அச்சம் விஞ்ஞானிகள் மத்தியிலும் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. இதனால் புதிய மரபணு மாறிய கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் இங்கிலாந்தின் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments