தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து உருவான புதிய யூனியன்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ் திரைப்படத்யாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியேஷனும் இணைந்து டெக்னீசியன் யூனியன் என்ற புதிய யூனியனை துவங்கியுள்ளது.
புதியதாக தொடங்கப்பட்டுள்ள இந்த டெக்னீசியன் யூனியனில் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தில் இருந்த டெக்னீசியன் யூனியனிலிருந்து விலகி பலரும் இணைந்துள்ளனர். அவர்களுக்கு அதற்கான புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், அவுட்டோர் யூனிட் அசோசியனின் தலைவர் முத்துசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த புதிய யூனியனின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் பேசியதாவது: புதியதாக துவங்கப்பட்டுள்ள டெக்னீசியன் யூனியன் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுக்கு என்ன குறைகள், என்ன பிரச்சனைகள் இருந்தாலும் எங்களிடம் நீங்கள் தயங்காமல் கூறலாம். தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் எப்போதும் இருக்கிறது என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments