N440K-என்ற புதிய வகை கொரோனா...!தென் மாநிலங்களில் தீவிரம்...! ஆய்வாளர்கள் அறிக்கை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென் மாநிலங்களில் N440K-என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாவின் தீவிரம் குறைந்து வந்தாலும், கேரளா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. கேரளாவில் 4000 முதல் 5000 பேருக்கும், மஹாராஷ்டிராவில் 5000 முதல் 6000 பேருக்கும் தினசரி தொற்று பாதிப்பு ஏற்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.கொரோனாவின் தீவிரத்தை தடுக்கும் பொருட்டு இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இம்மாநிலங்களை போலவே மும்பையிலும் தீவிரமாக தொற்று பரவியுள்ளதால், சுமார் 1305 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டிருக்கிறது.
ஹைதராபாத்தைச் சார்ந்த சி.எஸ்.ஐ.ஆர்-செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் (சி.சி.எம்.பி) விஞ்ஞானிகள் ஆய்வு செய்துள்ளனர்.
இதுபற்றி சிசிஎம்பி இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பதாவது,
"N440K (variant) என்ற புதிய வகை கொரோனா தென் மாநிலங்களில் பரவி வருவதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்புகள் தேவை. இந்த வகை தொற்றை எளிதாகவும், முன்னே கண்டறிவதன் மூலம் நாம் பேராபத்திலிருந்து வருமுன் காத்துக்கொள்ள முடியும் என அதில் கூறப்பட்டிருந்தது.
கொரோனா தடுப்பூசி என்பது மக்களுக்கு பெரும் உதவிகரமாக இருந்தாலும், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் சானிடைசர் பயன்படுத்துவது உள்ளிட்டவை தான் கொரோனாவை கட்டுப்படுத்த சிறந்த ஆயுதங்களாகும். இத்தொற்றின் தாக்கத்தில் புதிய வகை கொரோனா வைரஸ்கள் உருவாக்கிக்கொண்டே தான் இருக்கும். இதுவரை 5000 வகை கொரோனா வைரஸ்கள் குறித்து பகுப்பாய்வுகள் செய்து, அவை எப்படி உருவாகின என்பது குறித்தும் ஆய்வுகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், மக்கள் அதை கட்டாயமாக தடுக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout