கொரோனா சிகிச்சையில் புதிய திருப்பம்!!! மகிழ்ச்சித்தரும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் சோதனை முடிவுகள்!!!

  • IndiaGlitz, [Saturday,April 18 2020]

 

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் கொரோனா சிகிச்சையில் தற்போது புதிய திருப்பத்தைக் கண்டுள்ளதாக மகிழ்ச்சித் தெரிவித்து இருக்கிறது. இதுவரை கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ரோகுளோரோகுயின், இன்டர்ஃபிரான் போன்ற மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர Remdsivir, ritonavir/lopinavir போன்ற மருந்துகளும் சோதனையில் உள்ளன. இப்படியான நெருக்கடியில் பல நாடுகள் குணமடைந்த கொரோனா நோயளிகளிடமிருந்து அவர்களது பிளாஸ்மாக்களை பெற்று சிகிச்சைக்கு பயன்படுத்தியும் வருகின்றனர். ஆனால் மேற்கண்ட எந்த முறைகளிலும் உறுதியாக கொரோனா குணமடையும் என்ற நம்பிக்கையை இதுவரை மருத்துவ உலகம் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் புதிய திருப்பமாக அமெரிக்காவின் சிகாகோ Gilead Sciences மருத்துவப் பல்கலைக்கழகம் Remdesivir மருந்தின் மீதான சோதனையில் வெற்றிப் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அடிப்படையில் கொரோனா வைரஸ் மனித உடலுக்குள்சென்று தன்னைப் போல பல்லாயிரக்கணக்கான பிரதிகளை எடுப்பதற்கு அடினோசைன் ட்ரைபாஸ்பேட் என்ற வேதிப்பொருளை பயன்படுத்துகிறது. இந்த வேதிப்பொருளை ஒத்த தன்மையைக்கொண்ட Remdesivir மருந்தை மனித செல்லுக்குள் புகுத்திவிட்டால் கொரோனா வைரஸ் குழம்பி நிலைக்குலைந்து செயலிழந்துவிடும். இதற்கு முன்னதாக Remdesivir மருந்து கொரோனா வைரஸின் மற்ற வைரஸ் தொற்றுகளின்போது நல்ல பலனை அளித்தது. தற்போது கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மருந்தைப் பயன்படுத்தி பல நாடுகள் சோதனை செய்து வருகின்றன. தற்போது இந்த சோதனையை சிகாகோ பல்கலைக்கழகம் நிகழ்த்தியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிகாகோவின் பல்கலைக்கழகத்தின் Gilead Sciences மருத்துவ மனையில் அனுமதிக்கப்படும் அனைத்து கொரோனோ நோயளிகளும் குறைந்தது 6 அல்லது 7 நாட்களுக்குள்ளாக வீடுதிரும்பியுள்ளனர். அந்த மருத்துவமனையில் நோயின் தீவிரம் கண்ட பெரும்பாலான நோயளிகளுக்கு Remdesivir மருந்து கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் 2 நபரைத் தவிர மற்ற எல்லோரும் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர் என்று கொரோனா சிகிச்சை பிரிவுக்குத் தலைமைத் தாங்கும் டாக்டர் கேத்லீன் முல்லேன் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து இந்த மருத்துவமனையின் சார்பாக வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

Remdesivir மருந்து சிகிச்சையினால் கடுமையான கொரோனா பாதிப்புள்ள பலரும் குறைந்த நாட்களிலேயே வீடு திரும்புகின்றனர். கொரோனா சிகிச்சைக்கு 10 நாட்கள் தேவைப்படாது எனத் தற்போது கேத்லீன் முல்லேன் கூறுகிறார். Remdesivir மருந்து பரிசோதனையில் Gilead Sciences வெற்றிப்பெற்றதால் அதன் பங்குகள் தற்போது 16 விழுக்காடு அதிகரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சோதனைக்காக பல்கலைக்கழகம் 125 கொரோனா நோயாளிகளை தேர்வு செய்திருக்கிறது. அதில் 113 பேர் நல்ல முறையில் குணம் பெற்று வீடு திரும்பியிருக்கின்றனர். இந்த Remdesivir மருந்து சோதனை முறைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பதையும் தற்போது Gilead Sciences பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இதுவரை நடந்துள்ள பகுதியளவு வரையறைகளை வைத்துக்கொண்டு கொரோனாவுக்கு Remdesivir தான் சிறந்த மருந்து எனவும் கூறிவிட முடியாது என அந்தப் பல்லைக்கழகம் குறிப்பிட்டு இருக்கிறது.

கொரோனா பரிசோதனைக்காக உலகம் முழுவதும 152 இடங்களில் பல்வேறு மருந்துகளைக் கொடுத்து மருத்துவர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சிகாகோ கிலியட் பல்கலைக்கழகமும் ஒன்று. மேலும், 1600 தீவிர கொரோனா நோயாளிகளுக்கு Remdesivir மருந்து கொடுக்கப்பட்டு சோதனை முடிவுகள் எடுக்கப் படவுள்ளன. கிலியட் பல்கலைக்கழகத்தின் Remdesivir மருந்து குறித்த ஆய்வு முடிவினை இந்த மாத இறுதிக்குள் எதிர்ப்பார்க்கலாம் எனவும் தெரிகிறது.

More News

24 மணி நேரத்தில் 991 பேருக்கு பாசிட்டிவ்: ஊரடங்கையும் மீறி இந்தியாவில் பரவும் கொரோனா

கொரோனா பரவுதலை தடுப்பதற்காக கடந்த மூன்று வாரங்களுக்கு மேல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 3 வரை நீடிக்கும்

கொரோனா ஊரடங்கால் 15 வருடங்கள் கழித்து இணைந்த தாயும் மகனும்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 15 ஆண்டுகளுக்கு முன் பிரிந்த தாயும் மகனும் கொரோனா ஊரடங்கால் இணைந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

இந்தியாவில் விமான சேவை தொடங்கும் தேதிகள் அறிவிப்பு

இந்தியாவில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முதல்கட்ட ஊரடங்கும், ஏப்ரல் 15 முதல் மே 3ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து

உலகம் முழுவதும் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுப் போட்டிகள்!!! எப்போது நடைபெறும்??? விரிவான தொகுப்பு...

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் பல முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது எவ்வகை நீதி? அரசிடம் மீண்டும் கேள்வி கேட்ட கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவ்வப்போது தனது டுவிட்டரில் ஆட்சியாளர்களை எதிர்த்து கேள்விகளை எழுப்பி வருகிறார்.