2 நிமிடம் போதும்.பாம்புக் கடியை அடையாளம் காண புதிய கருவி, கேரளாவில் கண்டுபிடிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,December 05 2019]

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி பகுதியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மாணவி ஷஹலா ஷெரின் பாம்பு கடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்காத ஆசிரியர், தலைமை ஆசிரியர், மருத்துவர்கள் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'பாம்பு கடித்துவிட்டது' என மாணவி கூறியபோது, 'அது ஆணி குத்தியதால் ஏற்பட்ட காயம்' என ஆசிரியர்கள் தெரிவித்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அரசின் நடவடிக்கை காரணமாக, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, முன்ஜாமீன் பெறும் முயற்சியில் ஆசிரியர்களும் மருத்துவர்களும் இறங்கியுள்ளனர்.

இந்தநிலையில், பாம்பு கடித்தவரின் ஒரு துளி ரத்தத்தைப் பரிசோதித்து, கடித்தது எந்தவகைப் பாம்பு என்பதை இரண்டு நிமிடத்தில் கண்டுபிடிக்கும் ஸ்ட்ரிப் ஒன்றை திருவனந்தபுரம் ராஜீவ்காந்தி சென்டர் பார் பயோ டெக்னாலஜி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. 'இந்த ஸ்ட்ரிப் மூலம் பாம்பு கடித்த விஷம் உள்ளதா, எந்தவகை பாம்பு கடித்தது என யார் வேண்டுமானாலும் கண்டுபிடித்துவிடமுடியும்' என்கிறார்கள் மருத்துவர்கள்.

''பெண்கள் கருவுற்றிருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்கும் ஸ்ட்ரிப்பை அடிப்படையைக் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து கோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் கோடு ஸ்ட்ரிப் கன்ட்ரோல் யூனிட்டாகும். அடுத்தடுத்த நான்கு கோடுகளும் பாம்பின் இனங்களைச் சுட்டிக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூர்க்கன் வகை பாம்பு, அணலி வகை பாம்பு, வெள்ளிக்கொட்டன், ரத்தமண்டலி ஆகிய பாம்புகளின் வகைகளை இதன்மூலம் கண்டுபிடித்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க முடியும்'' என இந்த ஸ்ட்ரிப் கண்டுபிடிப்பின் தலைவராக இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''பாம்பு கடித்த இடத்தில் உள்ள திரவம் அல்லது ரத்தத்தை ஸ்ட்ரிப்பில் விட்டால் இரண்டு நிமிடத்தில் கடித்த பாம்பின் வகையைக் கண்டுபிடித்துவிடலாம். பாம்பின் வகைக்கு நேரே உள்ள கோடு அதற்கான சிக்னலைத் தெரிவிக்கும். பத்து நிமிடம் ஆகியும் எந்த கோட்டிலும் சிக்னல் தெரியவில்லை என்றால் பாம்பு கடித்த விஷம் ஏறவில்லை என அர்த்தம். மூன்று வருடங்கள் ஆய்வு செய்து இந்த ஸ்ட்ரிப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ஸ்ட்ரிப் தயாரிக்க சுமார் 50 ரூபாய் ஆகிறது.வியாபாரரீதியில் தயாரிக்கும்போது இன்னும் குறைந்த விலையில் இதனை வழங்க முடியும். இது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிடம் ஒப்படைக்கப்படும். அவர்களின் பரிசோதனை முடிந்த பிறகு விற்பனைக்கு வரும் என்றார்.

இந்தியாவில் ஆண்டுக்கு 49,000 பேர் பாம்பு கடித்து இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 'மூர்க்கன் வகை பாம்பு, அணலி வகை பாம்பு, வெள்ளிக்கொட்டன், ரத்தமண்டலி ஆகிய வகையான பாம்புகள் கடித்து இறந்தவர்கள் அதிகம் என்பதால், இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்கின்றனர் மருத்துவர்கள்.

 

More News

இந்த வாரம் வெளியாகும் 4 படங்களின் ரன்னிங் டைம் தகவல்கள்

வரும் வெள்ளியன்று 5 படங்கள் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென வினியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்று எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் 'கேப்மாரி'

என் மனைவியை பாம்பு கடித்துவிட்டது.. டி.வி நாடகத்தைப் பார்த்து பிளான் போட்டு கொலை செய்த கணவர், கைது ..!

மத்தியப் பிரதேசத்தில் மனைவியைக் கொன்று விட்டு நாடகமாடிய கணவர், பிரேதப் பரிசோதனை அறிக்கையால் சிக்கியுள்ளார்

கயிற்றில் சிக்கிய சுறா..கை கொடுத்து காப்பாற்றிய மீனவர்கள்..!

மலேசியாவில் கயிற்றில் சிக்கிக் கொண்ட தன்னைக் காப்பாற்றிய மீனவர்களுக்கு சுறா ஒன்று நன்றி கூறிய வீடியோ வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய 'தலைவி'

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள அவரது சமாதியில்

தளபதி 64: சாட்டிலைட் உரிமையை அடுத்து டிஜிட்டல் உரிமை வியாபாரமும் முடிந்தது

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்த நிலையில்