பிக்பாஸ் நேரத்தில் சன் டிவியில் புதிய சீரியல்.. மாற்றப்பட்ட 'மல்லி' சீரியல் நேரம்..!

  • IndiaGlitz, [Tuesday,October 29 2024]

விஜய் டிவியில் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் 9.30 மணிக்கு சன் டிவியில் ஒரு புதிய சீரியல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இரு தொலைக்காட்சிக்கும் கடும் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீரியல் என்றாலே சன் டிவி என்ற நிலையில் முதல் பத்து டிஆர்பி இடங்களில் கிட்டத்தட்ட ஏழு அல்லது எட்டு இடங்களை சன் டிவி தொடர்கள் தான் பிடித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் ஆலியா மானசா நடித்த ’இனியா’ தொடர் முடிவடைந்த நிலையில் வரும் திங்கள் முதல் சன் டிவியில் இரவு 9.30 மணிக்கு ’ரஞ்சனி’ என்ற தொடர் ஆரம்பமாக உள்ளது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த தொடர் விஜய் டிவியில் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் நேரத்தில் ஒளிபரப்பாக இருப்பதால் கடும் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இரவு 9.30 மணிக்கு ’ரஞ்சனி’ தொடர் ஒளிபரப்பாக இருப்பதால் அந்த நேரத்தில் ஒளிபரப்பான ’மல்லி’ தொடர் 10 மணிக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. டிஆர்பியில் நல்ல இடத்தை பிடித்து வரும் ’மல்லி’ தொடரை நேரம் மாற்றியதால் டிஆர்பி பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.