8 நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ்??? இளம் வயதினரை அதிகம் பாதிக்குமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் 70% வேகமாகப் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தோற்றம் பெற்றதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியது. இந்த வைரஸ் தாக்கத்தினால் இங்கிலாந்தின் கொரோனா தொற்று எண்ணிக்கை பன்மடங்காக அதிகரிக்கவும் செய்தது. இதனால் லண்டன் உட்பட பல முக்கிய நகரங்களில் 4 அடுக்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல உலக நாடுகள் இங்கிலாந்து நாட்டிற்கு இடையிலான விமானப் போக்குவரத்திற்கும் தடை விதித்தன. புதிய வகை கொரோனா தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இப்படி பல்வேறுக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் 8 ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய வகை கொரோனா தொற்று பரவி விட்டதாக உலகச் சுகாதார அமைப்பு திடுக்கிடும் தகவலை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
கொரோனா வைரஸில் ஏற்பட்ட புதிய மாதிரி Voc-202012-01. இது மற்ற வகை கொரோனா வைரஸ்களைவிட 70% வேகமாகப் பரவும் தன்மைக் கொண்டது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பாவின் பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தனது டிவிட்டரில் ஒரு தகவலை கூறியுள்ளார். அதில் புதிய வகை கொரோனா வைரஸ் இளம் வயதினரை அதிகம் தாக்குவதாகவும் தற்போதுவரை 8 ஐரோப்பிய நாடுகளில் புதியவகை கொரோனா வைரஸ் பரவிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் முதல் இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தோரின் மொத்த எண்ணிக்கை 2390 பேர் என்று தமிழகச் சுகாதாரத்துறை குறிப்பிட்டு உள்ளது. அவர்களில் 1,126 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். கடந்த 24 ஆம் தேதி இங்கிலாந்தில் வந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டது. கிங்ஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார் அவர் தற்போது நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இங்கிலாந்தில் இருந்து தமிழகம் திரும்பிய 4 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று உறுதிச் செய்யப்பட்டு இருக்கிறது. அவர்களில் தஞ்சாவூரைச் சேர்ந்த 2 பேர், சென்னை மற்றும் மதுரையைச் சேர்ந்த தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது எனத் தமிழகச் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார். அவர்களுக்கு புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த அவர்களின் கொரோனா மாதிரிகள் பூனே மருத்துவ ஆய்வுக்கழகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
8 countries in the @WHO_Europe region have now identified the new #COVID19 variant VOC-202012/01. It is vital to strengthen existing protective measures: distancing/masks/staying in core support bubbles. @WHO is continuing to monitor & will provide updates?? #solidarity is key
— Hans Kluge (@hans_kluge) December 25, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments