பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்கள்… பண்டிகையில் புது கொண்டாட்டம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பண்டிகையையொட்டி இந்தியச் சந்தையில் வர்த்தகம் களைக்கட்டி இருக்கிறது. குறிப்பாக செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களின் வரவு அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் விவோ நிறுவனம் தனது Y20T மாடல் பட்ஜெட் போனை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ViVo Y20T- 6.51 இன்ச் கொண்ட LCD ஸ்கீரின், ஸ்னாப்டிராகன் 662 SoC சிப்செட் ரேம், 64 ஜிபி ஸ்டோரேஸ் கொண்ட இந்த போனில் Extended Ram 2.0 தொழில்நுட்பத்துடன் மல்டி டர்போ 5.0 மோட், ரியர் சைடில் டிரிபிள் கேமரா, 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, வாட்டர் டிராப் நாட்ச்சில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, 11,5000 mAh ஆண்ட்ராய்ட் பேட்டரி, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், மைக்ரோ USB, 4G கனெக்டிவிட்டி, பக்கவாட்டில் ஃபிங்கர் பிரிண்ட் ரீடர் போன்றவை இதன் சிறப்பு அம்சங்களாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ViVo Y20T விலை ரூ.15,490 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இரண்டு கலரில் இந்தபோனை இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
Oppo A55 – அக்டோபரில் ஓபோ நிறுவனம் பல ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. பின்பக்கம் 3 கேமராக்களை கொண்ட இந்த ஸ்மார்ட் போன்கள் 6GB RAM வரை கிடைக்கிறது. இதில் 4ஜிபி ரேம், +64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.15,490 மற்றும் 6 ஜிபி ரேம், +128 ஜிபி ஸ்டோரேஸ் மாடல் ரூ.17,490 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரெயின்போ ப்ளூ மற்றும் ஸ்டார்ரி பிளாக் என இரண்டு வண்ணங்களில் இந்தப் போன்கள் கிடைக்கின்றன.
A55 ஓபோ போன்கள் மாடல் 193 கிராம் எடையுடன் 6.51 இன்ச் ஹெச்டி ஸ்கீரின், ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி SoC, 6 ஜிபி ரேம், 50 எம்பி பிரைமரி ஷுட்டர், 2 எம்பி போர்ட்ரெயிட் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா எனத் தலைசிறந்த மூன்று பின்புற கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 128 ஜிபி வரை சேமிப்பு மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக ஒரு பிரத்யேக ஸ்லாட், 18W `பாஸ்ட் சார்ஜ், 5,000 mAh பேட்டரி பேக் போன்ற அம்சங்களுடன் கிடைக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com