ஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தற்போது சந்தைக்கு வரவிருக்கும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் 2 டோஸ் அளவுகளில் எடுத்துக் கொண்டால் மட்டுமே மனித உடலில் கொரோனாவிற்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை பெறமுடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி தயாரிக்கும் முறையை அடிப்படையாக வைத்து ஒரே டோஸில் கொரோனா வைரஸை தாக்கி அழிக்கும் தடுப்பூசியை பெல்ஜியம் நாட்டின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
பெல்ஜியம் நாட்டின் கே.யு. லுவனில் எனும் நகரில் அமைந்துள்ள ரெகா எனும் மருந்து நிறுவனம் ஒரே டோஸில் கொரோனா வைரஸை தாக்கி அழிக்கும் தடுப்பூசி மருந்தை தயாரித்து உள்ளது. இந்தத் தடுப்பூசியை வெள்ளெலிகள் மற்றும் குரங்குகளுக்கு செலுத்திப் பார்க்கும்போது முழுமையான பாதுகாப்பினைக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை (மரபணு வரிசையைத்) தாக்கி அழிக்கும் வகையில் இந்த தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் ஃபைசர், மாடெர்னா, ரஷ்யாவின் ஸ்புட்னிக், இங்கிலாந்தின் கோவேக்சின் போன்ற அனைத்து தடுப்பூசி மருந்துகளும் 2 டோஸ் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முறையில்தான் உருவாக்கப்பட்டு வருகிறது. இது பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. காரணம் 2 டோஸ் அளவுள்ள மருந்துகளை அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு நேரமும், செலவும் அதிகமாகும். இந்நிலையில் ஒரே டோஸ் அளவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு என்பது பல நாடுகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை கொடுக்கலாம். இந்நிலையில் பெல்ஜியம் ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து அதற்கு ரெகாவேஸ் எனவும் பெயரிட்டு இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments