ஒரே டோஸில் கொரோனா காலி… விஞ்ஞானிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,December 03 2020]

 

தற்போது சந்தைக்கு வரவிருக்கும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் 2 டோஸ் அளவுகளில் எடுத்துக் கொண்டால் மட்டுமே மனித உடலில் கொரோனாவிற்கு முழுமையான நோய் எதிர்ப்பு சக்தியை பெறமுடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் மஞ்சள் காய்ச்சலுக்கு தடுப்பூசி தயாரிக்கும் முறையை அடிப்படையாக வைத்து ஒரே டோஸில் கொரோனா வைரஸை தாக்கி அழிக்கும் தடுப்பூசியை பெல்ஜியம் நாட்டின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர்.

பெல்ஜியம் நாட்டின் கே.யு. லுவனில் எனும் நகரில் அமைந்துள்ள ரெகா எனும் மருந்து நிறுவனம் ஒரே டோஸில் கொரோனா வைரஸை தாக்கி அழிக்கும் தடுப்பூசி மருந்தை தயாரித்து உள்ளது. இந்தத் தடுப்பூசியை வெள்ளெலிகள் மற்றும் குரங்குகளுக்கு செலுத்திப் பார்க்கும்போது முழுமையான பாதுகாப்பினைக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தை (மரபணு வரிசையைத்) தாக்கி அழிக்கும் வகையில் இந்த தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் ஃபைசர், மாடெர்னா, ரஷ்யாவின் ஸ்புட்னிக், இங்கிலாந்தின் கோவேக்சின் போன்ற அனைத்து தடுப்பூசி மருந்துகளும் 2 டோஸ் அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முறையில்தான் உருவாக்கப்பட்டு வருகிறது. இது பெரும் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. காரணம் 2 டோஸ் அளவுள்ள மருந்துகளை அனைத்து மக்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு நேரமும், செலவும் அதிகமாகும். இந்நிலையில் ஒரே டோஸ் அளவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு என்பது பல நாடுகளுக்குப் பெரும் மகிழ்ச்சியை கொடுக்கலாம். இந்நிலையில் பெல்ஜியம் ஒரே டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்து அதற்கு ரெகாவேஸ் எனவும் பெயரிட்டு இருக்கிறது.

More News

இந்திய அளவில் சாதனை செய்ய காத்திருக்கும் 'மாஸ்டர்': மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்று சமீபத்தில் படக்குழுவினர் உறுதி செய்த நிலையில்

'சூர்யா 40' படப்பிடிப்பு எப்போது? இணையத்தில் கசிந்த தகவல்!

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சூர்யாவின் அடுத்த படமான 'சூர்யா 40' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது 

சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சியான் விக்ரம், 'டிமாண்டி காலனி', இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தின் 'கோப்ரா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு: 2020 எப்போது முடியுமோ?

2020ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து தமிழ்நாடு, இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் சோதனையான ஒரு ஆண்டாகவே இருந்தது. ஜனவரி மாதமே உலகின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம்

பாம்பனுக்கு அருகே புரெவி புயல்… கலக்கத்தில் மக்கள்!!!

புரெவி புயல் வங்கக்கடலில் பாம்பனுக்கு 90 கி.மீ தொலைவில் தற்போது மையம் கொண்டிருக்கிறது.