புதிய  புரொஜெக்ட்  .. புதிய ஸ்கிரிப்ட்: பிரபல இசையமைப்பாளருடன் மீண்டும் இணையும் செல்வராகவன்..

  • IndiaGlitz, [Monday,September 16 2024]

பிரபல இயக்குனர் செல்வராகவன் பெரும்பாலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணிபுரிந்த நிலையில் இரண்டு படங்களில் மட்டுமே அவர் ஜிவி பிரகாஷ் உடன் பணிபுரிந்தார்.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து அவர் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’காதல் கொண்டேன்’ ’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுப்பேட்டை’ உள்பட பல படங்களில் யுவன்சங்கர் ராஜா இசை அமைத்த நிலையில் ’ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ’மயக்கம் என்ன’ ஆகிய இரு படங்களுக்கு மட்டுமே ஜிவி பிரகாஷ் இசை அமைத்தார். இந்த இரண்டு படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் செல்வராகவன் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணி இணையுள்ளது. இது குறித்து அறிவிப்பை ஜீவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ’புதிய ஸ்கிரிப் மற்றும் புதிய புரொஜெக்ட், செல்வராகவன் அவர்களுடன் இணைந்துள்ளேன். ஒரு புதிய பயணம் காத்திருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஜிவி பிரகாஷ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

சித்தார்த் - அதிதி ராவ் திருமணம்: இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன் நடந்த நிலையில் இன்று இருவருக்கும் திருமணம் நடந்துள்ள

ஓடிடியில் முற்றிலும் மாறுபட்ட 'லால் சலாம்'..ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு.. ஹார்ட் டிஸ்க் கிடைத்துவிட்டதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை என்பதும் எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை என்பதும் தெரிந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'வேட்டையன்' இசை வெளியீடு எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

லெஜண்ட் சரவணன் அடுத்த படம்.. தூத்துக்குடியில் படப்பிடிப்பு..இசையமைப்பாளர் யார்?

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே நடந்து கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தில் மூன்று பிரபலங்கள்

ராகவா லாரன்ஸ் 25வது படம் சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் ரீமேக்கா? என்ன கதை?

நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 25 வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் பாலிவுட் படத்தின் ரீமேக் என்றும் தமிழ் மற்றும் தெலுங்கில்