புதிய புரொஜெக்ட் .. புதிய ஸ்கிரிப்ட்: பிரபல இசையமைப்பாளருடன் மீண்டும் இணையும் செல்வராகவன்..
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் செல்வராகவன் பெரும்பாலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணிபுரிந்த நிலையில் இரண்டு படங்களில் மட்டுமே அவர் ஜிவி பிரகாஷ் உடன் பணிபுரிந்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து அவர் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’காதல் கொண்டேன்’ ’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுப்பேட்டை’ உள்பட பல படங்களில் யுவன்சங்கர் ராஜா இசை அமைத்த நிலையில் ’ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ’மயக்கம் என்ன’ ஆகிய இரு படங்களுக்கு மட்டுமே ஜிவி பிரகாஷ் இசை அமைத்தார். இந்த இரண்டு படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் செல்வராகவன் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணி இணையுள்ளது. இது குறித்து அறிவிப்பை ஜீவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ’புதிய ஸ்கிரிப் மற்றும் புதிய புரொஜெக்ட், செல்வராகவன் அவர்களுடன் இணைந்துள்ளேன். ஒரு புதிய பயணம் காத்திருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஜிவி பிரகாஷ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
After Aayirathil oruvan and Mayakkam enna ….. A new beginning … #AayirathilOruvan #MayakkamEnna @selvaraghavan …. A new journey starts today ….. pic.twitter.com/cYvQiC2eUy
— G.V.Prakash Kumar (@gvprakash) September 16, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com