விஸ்வாசம்: தல்லே தில்லாலே பாடல் விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது என்பது தெரிந்ததே. குறிப்பாக 'அடிச்சி தூக்கு' பாடலும் 'வேட்டி கட்டு' பாடலும் இன்னும் சமூக வலைத்தளங்களில் டிரெண்டில் உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஆல்பத்தில் இல்லாத புதிய பாடல் ஒன்றை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பக்கா கிராமிய பாடலாக 'தல்லே தில்லாலே என்று ஆரம்பிக்கும் இந்த பாடல் நிச்சயம் கிராமிய பாடல் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். குறிப்பாக
'நெல்லுக்கட்டு சுமக்கும் புள்ள,
நெஞ்சை கட்டி இழுக்கும் புள்ள,
சுத்திமுத்தி யாரும் இல்ல தல்லே தில்லாலே
நீ சூசகமா வாடி புள்ளே தல்லே தில்லாலே
என்ற வரிகளும்
கன்னங்கரு கருத்த மச்சான்
கைக்கு வளையல் போட்ட மச்சான்
மன்னருவா பிடிச்சிருக்கேன் தல்லே தில்லாலே
உன் பாசங்குதான் பலிக்காது தல்லே தில்லாலே
ஆகிய வரிகளும் பக்கா கிராமிய பாடல் வரிகளாக உள்ளது.
அருண்பாரதி எழுதிய இந்த பாடலை அந்தோணிதாசன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நிமிடம் 50 வினாடிகளே இந்த பாடல் இருந்தாலும் பாடல் தொடக்கம் முதல் முடிவு வரை ஆட்டம் போடும் வகையில் உள்ளது இந்த பாடலில் உள்ள மிகப்பெரிய பலம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments