'பிக்பாஸ் 2' நிகழ்ச்சியில் புதிய விதிமுறைகள்

  • IndiaGlitz, [Friday,June 15 2018]

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்பாக உள்ளது. பிக்பாஸ் முதல் பாக நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது போலவே இந்த இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் முதல் பாகம் போலன்றி இந்த இரண்டாம் பாகத்தில் ஒருசில புதிய விதிமுறைகள் போட்டியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி விதிமுறைகளை மீறுவோர்களுக்கு தண்டனை உண்டு. அதிலும் சாதாரண தண்டனையாக இல்லாமல் ஜெயில் தண்டனையாம். இதற்காகவே ஜெயில் அறை போன்ற செட்டப் உள்ளே அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஜெயிலில் ஏசி, ஃபேன், மெத்தை என்ற எந்த அடிப்படை வசதியும் இல்லை. 

அதேபோல் இந்த முறை விதிமுறைகளை மீறும் போட்டியாளர்கள், மற்றும் பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவோர்களை பிக்பாஸ் முடிவெடுத்து அவர்களை வெளியே அனுப்பலாம் என்ற விதிமுறையும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய பாகத்தில் உள்ளபடி உடல்நிலை சரியில்லாமல் போனால், அல்லது எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டாலும் பிக்பாஸ் வீட்டை விட்டு போட்டியாளர் வெளியே அனுப்பப்படுவார்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பவர்ஸ்டார் சீனிவாசன், தாடி பாலாஜி மற்றும் அவருடைய மனைவி, நடிகை மும்தாஜ் ஆகியோர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் வரும் ஞாயிறு அன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த முழு தகவல்களையும் பார்ப்போம்

More News

சிவகார்த்திகேயனின் 'சீமராஜா' குறித்த முக்கிய அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீமராஜா' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

துல்கர் சல்மானின் அடுத்த தமிழ்ப்பட டைட்டில் அறிவிப்பு 

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் அதன் பின்னர் 'சோலோ' மற்றும் 'நடிகையர் திலகம்

ஸ்டாலின் முதல்வராக ஆதரவு கொடுத்த பிரபல நடிகர்

தமிழகத்தின் அடுத்த முதல்வர் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கூறி வரும் நிலையில் திரையுலகில் சிலரும் திமுகவுக்கு ஆதரவு தரவுள்ளதாக கூறப்படுகிறது.

மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்களில் நடிகர்களாக அவதாரம் எடுத்து வெற்றி பெற்றவர்கள் விஜய் ஆண்டனி மற்றும் ஜிவி பிரகாஷ். அந்த வரிசையில் கடந்த ஆண்டு 'மீசையை முறுக்கு' என்ற படத்தின் மூலம் நடிகராகவும்,

'வடசென்னை' ரிலீஸ் குறித்து தனுஷின் முக்கிய அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தை தயாரித்து சமீபத்தில் வெளியிட்ட அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், கடந்த சில நாட்களாக அந்த படத்தின் புரமோஷன் பணிகளில் மூழ்கியிருந்தார்.