இந்திய அணியை வலுப்படுத்த வரும் மற்றொரு ஜாம்பவான்… பிசிசிஐ தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தோல்வியைத் தொடர்ந்து இந்தியக் கிரிக்கெட் அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் விராட் கோலி டி20 அணியின் கேப்டன்சியை விட்டு விலகியதும் அணியை வலுப்படுத்தும் விதமாக ஒருநாள் போட்டி மற்றும் டி20 அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில் புது பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர் தற்போது இந்திய அணிக்கு தனது பங்களிப்பை செலுத்தும் விதமாக ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது என பிசிசிஐயின் தலைவர் கங்குலி தெரிவித்து உள்ளார். மேலும் கூடிய விரைவில் சச்சினின் பங்களிப்பை நீங்கள் பார்ப்பீர்கள் என்றும் கங்குலி கூறியிருக்கிறார். இந்தத் தகவல் கிரிக்கெட் ரசிகர்களிடையே புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியக் கிரிக்கெட் அணிக்கு முக்கியப் பங்காற்றிய பல மூத்த வீரர்கள் தற்போது இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக பங்காற்றி வருகின்றனர். அந்த வகையில் கங்குலி பிசிசிஐயின் தலைவராகப் பதவி வகிக்கிறார். ராகுல் டிராவிட் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். வி.வி.எஸ்.லட்சுமணன் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அந்த வகையில் தற்போது சச்சின் டெண்டுல்கரும் தனது பங்களிப்பை செய்வார் என்றும் அதற்காக புதிய பொறுப்புகள் உருவாக்கப்படும் என்றும் அதுகுறித்த அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout