12 மணி வரை மட்டுமே காய்கறி கடை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நேற்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்:

  • மெட்ரோ ரயில், தனியார் மற்றும் அரசு பேருந்துகள், டாக்ஸிகள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிக்க அனுமதி

  • அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் அதிகபட்சமாக 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி

  • திருமண நிகழ்வில் 50 பேர் இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி

  • மளிகை கடை, தேனீர் கடைகள் ஆகியவை பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி

  • உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை.

  • வணிக வளாகங்களில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் இயங்க தடை

  • தனியாக செயல்படுகின்ற மளிகை காய்கறி விற்பனை கடைகள் குளிர்சாதன வசதியுடன் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி

  • காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை

  • மருந்தகம் பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் மட்டும் வழக்கம்போல இயங்கும்

  • அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதி

மேற்கண்ட கட்டுப்பாடுகள் மே 6ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி காலை 4 மணி வரை இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது

More News

மனைவியை விவாகரத்து செய்கிறார் பில்கேட்ஸ்: 27 ஆண்டுகால திருமண உறவு முடிவு!

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பில்கேட்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

தினக்கூலி வீட்டில் இருந்து ஒரு பெண் எம்எல்ஏ… வாழ்த்திக் மகிழும் நெட்டிசன்கள்!

மேற்கு வங்காளத்தில் தற்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிப் பெற்றுள்ளது.

ஜெயலலிதாவுக்கு பின் நீங்கள் தான்: நடிகர் சித்தார்த் டுவிட்டுக்கு ஸ்டாலின் பதில்

ஜெயலலிதாவுக்கு பின் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் முதல்வராக பதவி ஏற்கப் போகிறார் என நடிகர் சித்தார்த் பதிவு செய்த ட்விட்டிற்கு முதல்வர் பதவியை ஏற்கவிருக்கும் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

ஆக்சிஜன் இன்றி வராண்டாவில் சுருண்டு கிடக்கும் கொரோனா நோயாளிகள்…பகீர் புகைப்படம்!

ஆக்சிஜன் இல்லை எனக் கூறும் தனியார் மருத்துவமனைகளின் மீது கடும் நடவடிக்கை,

ஆக்சிஜன் தட்டுப்பாடு… ஒரே மருத்துவமனையில் 24 பேர் உயிரைவிட்ட துயரச் சம்பவம்!

இந்தியா முழுக்க நேற்று 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.