12 மணி வரை மட்டுமே காய்கறி கடை: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்!
- IndiaGlitz, [Tuesday,May 04 2021]
தமிழகத்தில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டடோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நேற்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்:
மெட்ரோ ரயில், தனியார் மற்றும் அரசு பேருந்துகள், டாக்ஸிகள் ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிக்க அனுமதி
அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் அதிகபட்சமாக 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே இயங்க அனுமதி
திருமண நிகழ்வில் 50 பேர் இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி
மளிகை கடை, தேனீர் கடைகள் ஆகியவை பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி
உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை.
வணிக வளாகங்களில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் இயங்க தடை
தனியாக செயல்படுகின்ற மளிகை காய்கறி விற்பனை கடைகள் குளிர்சாதன வசதியுடன் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி
காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை
மருந்தகம் பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் மட்டும் வழக்கம்போல இயங்கும்
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டுமே அனுமதி
மேற்கண்ட கட்டுப்பாடுகள் மே 6ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி காலை 4 மணி வரை இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது