ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு மீண்டும் ஒரு குட் நியூஸ்…
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் புதிய ரேஷன் அட்டை வைத்து இருக்கும் 2.14 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் எனக் கூறி அதன் முதல் தவணை தற்போது தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய ரேஷன் அட்டைத்தாரர்களுக்கும் இந்த நன்கொடை வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்த கோரிக்கையைத் தொடர்ந்து 2.15 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பொதுவா இதுபோன்ற நிவாரணம் வழங்கும்போது 3 மாதங்களுக்கு முன்புவரை பெறப்பட்ட ரேஷன் அட்டைகளை அரசு கணக்கில் கொள்ளாது. ஆனால் கடந்த 6 மாதங்கள் முன்புவரை பெறப்பட்ட அனைத்து அட்டைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழகத்தில் 2,14,950 புதிய ரேஷன் கார்டுகளுக்கு ரூ.4,000 நிவாரணத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ரூ.42,99,000 ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout