பூமியைப் போல இன்னொரு கிரகம் கண்டுபிடிப்பு… ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூரியனுக்கு மிக நெருக்கமாக சுற்றிவரும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் தற்போது அடையாளம் கண்டுள்ளனர். இது பூமியின் அளவை ஒத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சூரியனுக்கு மிக நெருக்கமாகச் சுற்றிவரும் சிவப்பு நட்சத்திரமான ப்ராக்ஸிமா சென்டாரியைச் சுற்றி தற்போது மற்றொரு கிரகம் வலம்வருவதை நம்முடைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பால்வெளியில் இதுவரை பல கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவை பூமியைப் போன்று உயிர்வாழ்வதற்கு தகுதியானதாக இருக்குமா என்ற சந்தேகம் நீடித்துவருகிறது.
இந்நிலையில் சூரியனுக்கு மிக நெருக்கமாகச் சுற்றிவரும் Prozima D எனும் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கிரகம் பூமியில் இருந்து 4 ஒளி ஆண்டுகள் தொலைவில் 25 ட்ரில்லியன் மைல்கல் அதாவது 40.2 ட்ரில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சூரியனை விட இது எட்டில் 1 பாகத்தைக் கொண்டு கிட்டத்தட்ட பூமியின் அளவில் இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
சூரியனுக்கு நெருக்கமாக சுற்றிவரும் சிவப்பு நட்சத்திரம் ப்ராக்ஸிமா சென்டாரியை இந்தப் புது கிரகம் சுற்றிவருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சதன் அப்சர்வேட்டரி எனும் ஆய்விதழில் வெளியாகி இருக்கும் இந்தத் தகவல் தறபோது விண்வெளி ஆராய்ச்சியில் புது திருப்பத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments