புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் அதிமுகவிற்கு ஆதரவு!

  • IndiaGlitz, [Sunday,March 28 2021]

மானாமதுரையில் புதிய தமிழகம் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் அம்மாவட்ட செயலாளர் ராஜையா. ஆனால் இவரது விண்ணப்பத்தோடு ஏ.பி. படிவம் வழங்காததால் வேட்பாளர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவார் எனத் தேர்தல் அலுவலர் கூறியிருந்தார். இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணமூர்த்தியுடன் ஏற்பட்ட அதிருப்தியால் தற்போது ராஜையா புதிய தமிழகம் கட்சிக்கு தனது ஆதரவை கொடுக்காமல் அதிமுகவிற்கு ஆதரவு வழங்கி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் தேவேந்திரகுல மக்களுக்கு இருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று அவர்களை வேளாளர் பட்டியலில் இணைத்தார் தமிழக முதல்வர். இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவர் அதிமுகவிற்கு ஆதரவு வழங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் தனித்து போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தற்போது முதல்வர் வேட்பாளராக கிருஷ்சாமியை அறிவித்து தேர்தலில் போட்டியிடுகிறது. இந்நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி மானாமதுரை வேட்பாளர் அதிமுகவிற்கு ஆதரவு வழங்கி இருக்கிறார். இதனால் மானாமதுரை பகுதியில் அதிமுகவிற்கு வலிமை அதிகரித்து இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் கருத்துக் கூறப்பட்டு வருகிறது.

More News

செம்ம கிரியேட்டிவிட்டி… அதிமுகவின் அசத்தும் பிரச்சார விளம்பரங்கள்!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சில கட்சிகள் விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருகின்றன

முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சை பேச்சு: ஆ ராசாவுக்கு எழுந்த கண்டனமும், அவர் அளித்த விளக்கமும்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஒருசிலரின் பிரச்சாரங்கள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்லாந்து போல தமிழகம் மாறணுமா...! அதிமுக-வை ஜெயிக்க வைங்க...ராமதாஸ் ...! 

தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது என சொல்லலாம்.

நேருக்கு நேர் மோத தயாரா..? ஸ்டாலினை பார்த்து எடப்பாடி காரசாரக் கேள்வி...!

அதிமுக எதுவும் செய்யவில்லை எனக்கூறும் ஸ்டாலின், என்னுடன் நேரடியாக விவாதிக்க தயாரா என முதல்வர் பழனிச்சாமி நெல்லையில் பிரச்சார கூட்டத்தில் கேள்வி கேட்டுள்ளார். 

அதிமுக இதற்கு அனுமதிக்காது… இது தவறான பிரச்சாரம்… விளக்கும் அதிமுக தரப்பு!

கன்னியாகுமரி பகுதியில் கொள்கலன் (container terminal port) துறைமுகத்தை அதிமுக அரசு அமைக்கப் பேவதாக திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசி வருகிறது