இணையத் திரைகளில் வரிசைக்கட்டும் புதுப்படங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா ஊரடங்கில் சினிமாத்துறை கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது. இந்நிலையில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் இனிவரும் நாட்களில் தியரங்குகள் திறக்கப்பட்டு படம் வசூலைப்பெறுமா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. ஊரடங்கு முடிவுக்குவரும்போது பள்ளி, கல்லூரி, தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் துரிதமாகச் செயல்படும்போது திரையரங்குகளுக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி, ஊரடங்கினால் முடங்கியிருக்கும் சில படங்கள் தற்போது இணையத் தளங்களில் வெளியிடப்பட்டு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன.
அப்படி இணையத் திரையங்குகளில் வெளியாகி இருக்கும் சில தமிழ் படங்கள்,
அருண்விஜய் நடிப்பில் வெளியான “மாஃபியா: சேப்டர்1”, துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வசூலைப் பெற்றுவந்த “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” ஹிப்பாப் ஆதி நடித்த “நான் சிரித்தால்” போன்ற படங்கள் Amazone Prime, Netflix, G5 இணையத் தளங்களில் கிடைக்கின்றன. மார்ச்சில் வெளியான “தாராளபிரபு” நேற்று Amazone Prime இல் வெளியாகியிருக்கிறது. மேலும் பாரம், மெரினா புரட்சி, திரௌபதி போன்ற படங்களும் Amazone Prime இல் ஓடிக்கொண்டிருக்கின்றன.
மற்ற மொழிகளிலும் வெளியான புதுப்படங்கள் சிலவும் தற்போது Subtitle களோடு இணையத் திரைகளில் வெளியாகி இருக்கிறது. இந்தி – “Good News”, தெலுங்கு – “சரிலேரு நீக்கெவரு”, கன்னடம் – “மாயா பஜார் 2016” “லவ் மாக்டெய்ல்” “கண்டுமுட்டே” போன்ற கன்னடப் படங்களும் இணையத்திரைகளில் தற்போது கிடைக்கிறது.
மலையாளம் – கடந்த வாரங்களில் வெளியாகி, மக்களிம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் பஹகத் பாசில், நஸ்ரியா நடிப்பில் வெளியான “ட்ரான்ஸ்”, பிஜுமேனன் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான “அய்யப்பனும் கோஷியும்” இரண்டும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. கடந்த வருடங்களில் வரவேற்பை பெற்ற “லூசிஃபர்”, “ஹெலன்” “ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் 5.25” போன்ற படங்களும் தற்போது இணையத்திரைக்கு வந்திருக்கிறது.
இதுதவிர ஆஸ்கர் விருதுகளை குவித்த படங்களையும் தற்போது மக்கள் இணைத்தளங்களில் பார்த்து வருகின்றனர். அந்தவரிசையில் அண்மையில் ஆஸ்கர் விருதைப் பெற்ற “பாரசைட்”, “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட்” கடந்த வருடம் ஆஸ்கர் பெற்ற “தி ஷேப் ஆஃப் வாட்டர்” போன்ற படங்களும் இணையத்தில் கிடைக்கின்றன. தொலைக்காட்சியில் திரும்ப திரும்ப பார்த்த படங்களையே பார்த்துவந்த ரசிகர்கள் பலரும் தற்போது இணையத்தை நாடி புதுப்படங்களை ஆர்வமுடம் பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments