விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள்: சென்னையில் மட்டும் இத்தனை லட்சம் அபராதமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராதத் தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டது என்பதும் உயர்த்தப்பட்ட அபராத தொகை நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் வசூலிக்கப்பட்ட நிலையில் இரண்டே நாட்களில் ரூபாய் 42 லட்சம் அபராதம் வசூலிக்க பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சாலை விபத்துகளை கட்டுப்படுத்தும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தம் கொண்டு வந்தது. இதனை அடுத்து தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டதாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் அரசாணை வெளியிட்டு இருந்தார்.
இதன்படி புதிய அபராதத்தொகையின் விவரங்கள் பின்வருமாறு:
'ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.1,000 அபராதம் உயர்வு.
சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.500 அபராதம் உயர்வு.
செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு அபராதம் ரூ.1,000 அபராதம்.
காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.100-லிருந்து ரூ.1,000 அபராதம் உயர்வு.
'லைசென்சு' இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.500-லிருந்து ரூ.5 ஆயிரம் ஆக அபராதம் உயர்வு உயர்வு.
போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் (நோ பார்க்கிங்) ரூ.100-லிருந்து ரூ.500 ஆக அபராதம் உயர்வு.
தடை செய்யப்பட்ட சாலையில் (நோ என்ட்ரி) வாகனங்களை ஓட்டினால் ரூ.100-லிருந்து ரூ.500 ஆக அபராதம் உயர்வு.
மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களுக்கு பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ரூ.10,000 அபராதம்.
மேற்கண்ட புதிய அபராத தொகை கடந்த 28ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் கடந்த 2 நாட்களில் அதாவது அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில் சென்னையில் மட்டுமே விதிமுறைகளை மீறியதாக ரூபாய் 42 லட்சம் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து 6.187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அபராத உயர்வு காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் போக்குவரத்து போலீசார்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வாக்கு வாதங்கள் நடந்தன. ஆனால் வாக்குவாதத்தில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் கனிவாக பேசி சமரசம் செய்து அபராதத்தை வசூலிக்க வேண்டும் என போலீஸ் உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout