ஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது எவ்வளவு நேரமாகும் என்பதை ட்ராக் செய்ய புது App..!
Send us your feedback to audioarticles@vaarta.com
108 ஆம்புலன்ஸ் வருவதை டிராக் செய்ய பிரத்யேக செயலி இரண்டு மாதத்தில் துவங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, 108 ஆம்புலன்ஸ்களை அழைத்தால் வருவதற்கு ஒருமணி நேரம் ஆகிறது என குற்றம்சாட்டினார். அவரின் குற்றச்சாட்டை மறுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,
தமிழகத்தில் சர்வதேச நாடுகளை காட்டிலும் விரைவாக ஆம்புலன்ஸ் வருவதாக தெரிவித்தார். மாநகராட்சிகளில் 8.2 நிமிடங்களிலும், கிராம பகுதிகளில் 13.5 நிமிடங்களிலும், மலைப் பகுதிகளில் 16 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வருவதாக விளக்கமளித்தார். மேலும், ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டவுடன் வாகனம் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அழைத்தவர்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் பிரத்யேக செயலி இரண்டு மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவித்தார்.
விரைவில் 200 புதிய ஆம்புலன்ஸ் சேவை துவங்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இதுதவிர ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளிகளை இடமாற்றம் செய்ய தனியாக 60 ஆம்புலன்ஸ் சேவை துவங்கவுள்ளதாகவும், இந்த சேவை வழக்கமான 108 இல்லாமல் தனியாக வேறொரு தொடர்பு எண் கொண்டு செயல்படவுள்ளதாக தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments