ஆம்புலன்ஸ் எங்கிருந்து வருகிறது எவ்வளவு நேரமாகும் என்பதை ட்ராக் செய்ய புது App..!

  • IndiaGlitz, [Thursday,February 20 2020]

108 ஆம்புலன்ஸ் வருவதை டிராக் செய்ய பிரத்யேக செயலி இரண்டு மாதத்தில் துவங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, 108 ஆம்புலன்ஸ்களை அழைத்தால் வருவதற்கு ஒருமணி நேரம் ஆகிறது என குற்றம்சாட்டினார். அவரின் குற்றச்சாட்டை மறுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

தமிழகத்தில் சர்வதேச நாடுகளை காட்டிலும் விரைவாக ஆம்புலன்ஸ் வருவதாக தெரிவித்தார். மாநகராட்சிகளில் 8.2 நிமிடங்களிலும், கிராம பகுதிகளில் 13.5 நிமிடங்களிலும், மலைப் பகுதிகளில் 16 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வருவதாக விளக்கமளித்தார். மேலும், ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டவுடன் வாகனம் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என்பதை அழைத்தவர்கள் தெரிந்துக்கொள்ளும் வகையில் பிரத்யேக செயலி இரண்டு மாதத்தில் துவங்கவுள்ளதாக தெரிவித்தார்.

விரைவில் 200 புதிய ஆம்புலன்ஸ் சேவை துவங்க முதலமைச்சர் ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இதுதவிர ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளிகளை இடமாற்றம் செய்ய தனியாக 60 ஆம்புலன்ஸ் சேவை துவங்கவுள்ளதாகவும், இந்த சேவை வழக்கமான 108 இல்லாமல் தனியாக வேறொரு தொடர்பு எண் கொண்டு செயல்படவுள்ளதாக தெரிவித்தார்.

More News

ஆபாச நடிகையான மகள்: வாழ்த்து தெரிவித்த உலகப்புகழ் பெற்ற பிரபல இயக்குனர்!

உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஒருவர் தனது மகள் ஆபாச நடிகையாக விருப்பம் தெரிவித்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மீம்களில் இந்தச் சிறுவனை பார்த்திருப்பீர்கள்.. இன்று இவருக்கு 38-வது பிறந்தநாள்..!

நெட்டிசன்களால் அதிகம் முறை உபயோகிக்கப்பட்ட மீம் மெட்டீரியல் ஆன ஒசிட்டா ஐஹீம் இன்று 38-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ரஞ்சித் சார், நான் ரெடி: ஆர்யா வெளியிட்ட அசத்தலான வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார்.

தூக்குதண்டனையை தள்ளிப்போடுவதற்காக தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்ளும் நிர்பயா குற்றவாளி..!

அனைத்து சட்டரீதியான வாய்ப்புகளும் தீர்ந்துவிட்ட குற்றவாளியான வினய் ஷர்மா, தலையை சுவரின் மீது மோதி காயங்கள் ஏற்படுத்திக்கொள்ள முயற்சி செய்திருக்கிறார். உடனடியாக

லேரி டெஸ்லர் மறைந்தார்...! கட், காபி, பேஸ்ட்டை கண்டுபிடித்து கணினி வேலைகளை எளிதாக்கியவர்.

கணினி உலகின் செயல்பாடு திறனையே மாற்றிய கணினி விஞ்ஞானியான லேரி டேஸ்லர் தனது 74வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.