ஆண்களை மட்டும் குறிவைத்து தாக்கும் மர்ம நோய்… விஞ்ஞானிகளுக்கு இடையே ஏற்பட்ட புதிய அதிர்ச்சி!!!
- IndiaGlitz, [Friday,October 30 2020]
அமெரிக்காவில் இதுவரை கவனத்தில் வராத புதிய வகை நோய்த் தாக்கம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் இது ஆண்களை மட்டுமே குறிவைத்துத் தாக்கும் தன்மைக் கொண்டது என்பதையும் தெரிவித்து உள்ளனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மக்களில் குறைந்தது 40% பேர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர்.
இதுகுறித்த கருத்துகள் நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் (New England journal of Medicine) எனும் இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் 2500 க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அழற்சி (வீக்கம்) தொடர்புடைய பாதிப்புகள் இருந்ததாகவும் ஆனால இந்த பாதிப்புகளை மருத்துவர்களால் சரிசெய்ய முடியாத நிலைமை நீடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் ஆண்களை மட்டுமே தாக்கும் VEXAS எனும் புதிய நோயைக் கண்டுபிடித்து உள்ளனர்.
இந்தப் பாதிப்பினால் சில அபாயகரமான கோளாறுகள் ஏற்படுவதாகவும் அந்த விஞ்ஞானிகள் விளக்கம் அளித்து உள்ளனர். நரம்புகளில் இரத்தம் உறைவு வீக்கம், தொடர்ச்சியான காய்ச்சல், நுரையீரல் பாதிப்பு மற்றும் மைலோயிட் செல்களில் வெற்றிடத்தை உருவாக்குவது போன்றவை இதில் முதன்மையான சிக்கலாக இருந்து வருகிறது. மேலும் இந்தவகை நோய்த்தாக்கம் மரபணு மாற்றங்களால் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் அமெரிக்காவில் 125 மில்லியன் மக்கள் ஒருவித தொடர்ச்சியான அழற்சி நோயுடன் வாழ்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் 2500 பேருக்கு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட (VEXAS) யின் அறிகுறிகள் இருப்பதாகவும் அந்நாட்டு தேசிய மனித மரபணு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது. தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் உடல் வலி போன்றவை இதன் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் VEXAS எனும் புதிய அழற்சி நோய்க் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.