மெர்சல் எதிரொலி: வருகிறது தனியார் மருத்துவமனை குற்றங்களுக்கான புதிய சட்டம்

  • IndiaGlitz, [Friday,October 27 2017]

தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் குற்றங்கள் குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தாலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ரமணா' படத்தின் காட்சிகள் மக்கள் மனதில் ஆழப்பதிய செய்தன. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படத்திலும் தனியார் மருத்துவமனையில் நடைபெறும் குற்றங்கள், மெடிக்கல் செக்கப், சிசேரியன் குறித்த வசனங்கள், காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின

'மெர்சல்' படத்தின் வசனங்கள், காட்சிகள் குறித்து மருத்துவர்கள் சங்கமே முன்வந்து விளக்கம் அளிக்கும் அளவுக்கு அந்த காட்சியின் வீரியம் இருந்ததை உணர முடிந்தது.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் குற்றங்களை குறைக்க புதிய சட்டம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் 'மெர்சல்' படத்தின் எதிரொலியாக கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

ஒரு திரைப்படத்தின் காட்சிகள், வசனங்கள் ஒரு சட்டமே இயற்றும் அளவுக்கு வலிமையாக இருப்பது படக்குழுவினர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

More News

வடசென்னைக்கு ஆபத்து, வருமுன் காப்போம்: கமல் அழைப்பு

நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை தனது டுவிட்டரில் கூறி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் அடுத்த 2 தினங்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொ

சினிமா சாதனையாளர் சிவகுமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

மார்கண்டேயர், நடிகர், ஓவியர், சொற்பொழிவு சாதனையாளர், யோககலையில் மன்னன்,

தோனி மகளுக்கு அழைப்பு விடுத்த கேரள கோவில் நிர்வாகம்

சினிமாவில் தல அஜித் என்றால் கிரிக்கெட்டின் தல தோனி என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தோனி-சாக்சி தம்பதியின் இரண்டு வயது மகள் ஸிவா சமீபத்தில் ஒரு மலையாள பாடலை பாடிய வீடியோ

ரஜினியின் '2.0': விண்ணை தொடும் வேற லெவல் புரமோஷன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு புரமோஷனே தேவையில்லை என்றாலும் கடந்த சில வருடங்களாக வேற லெவலில் அவருடைய படங்கள் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.

இலங்கை அரசியலிலும் புயலை கிளப்பிய 'மெர்சல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற ஒருசில வசனங்களை நீக்க கோரி தமிழக பாஜக தலைவர்கள் குரல் கொடுத்தனர்.