மெர்சல் எதிரொலி: வருகிறது தனியார் மருத்துவமனை குற்றங்களுக்கான புதிய சட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் குற்றங்கள் குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தாலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ரமணா' படத்தின் காட்சிகள் மக்கள் மனதில் ஆழப்பதிய செய்தன. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான 'மெர்சல்' படத்திலும் தனியார் மருத்துவமனையில் நடைபெறும் குற்றங்கள், மெடிக்கல் செக்கப், சிசேரியன் குறித்த வசனங்கள், காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின
'மெர்சல்' படத்தின் வசனங்கள், காட்சிகள் குறித்து மருத்துவர்கள் சங்கமே முன்வந்து விளக்கம் அளிக்கும் அளவுக்கு அந்த காட்சியின் வீரியம் இருந்ததை உணர முடிந்தது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறும் குற்றங்களை குறைக்க புதிய சட்டம் வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டு வரப்படும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் 'மெர்சல்' படத்தின் எதிரொலியாக கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.
ஒரு திரைப்படத்தின் காட்சிகள், வசனங்கள் ஒரு சட்டமே இயற்றும் அளவுக்கு வலிமையாக இருப்பது படக்குழுவினர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout