ஐபிஎல் தொடரில் புதிய 2 அணிகள்… Owners யார் தெரியுமா?

2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இடம்பெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்து இருந்த நிலையில் இதற்கான ஏலம் நேற்று துபாயில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஏலத்தில் லக்னோ அணியை ஆர்பிஎஸ்ஜி குரூப் ஏலத்தில் எடுத்துள்ளது. அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் ஏலத்தில் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர் பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல் அணிகள் என 8 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ஹைதராபாத் அணி ஆரம்பத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் என்ற பெயரில் இயங்கி, பின்னர் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு புனே வாரியர்ஸ் இந்தியா, கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிகள் புதிதாக இணைக்கப்பட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் விளையாடியது. இதில் புனே வாரியர்ஸ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் கொச்சி டஸ்கர்ஸ் அணி நிதிநிலை காரணமாக விலகிக் கொண்டது.

தற்போது 2022 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் இணைக்கப்பட்டு இருக்கிறது. இதில் லக்னோ அணியை அதானி குழுமத்தைச் சேர்ந்த ஆர்.சி.சஞ்சீவ் கோயங்கோ ரூ.7,200 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல் பார்ட்னர்ஸ் ரூ.5,200 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் 2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள் மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறும். எனவே ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமத் தொகையும் அதிகரித்து பிசிசிஐயின் சொத்து மதிப்பு உயரும் எனச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒளிபரப்பு உரிமத் தொகை கிட்டத்தட்ட 28 ஆயிரம் கோடியில் இருந்து 36 ஆயிரம் கோடிவரை அதிகரிக்கலாம் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

More News

நாமினேஷனில் எத்தனை பேர்? யார் யாரையெல்லாம் நாமினேட் செய்தார்கள்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடந்த நிலையில் நேற்றைய நாமினேஷன் படலத்தில் மொத்தம் 9 பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர். அவர்களின்

ஸ்ருதி ஆட்டம் ஆரம்பம்: தாமரை செல்வியை கதற வைத்ததால் பரபரப்பு!

பிக்பாஸ் வீட்டில் சமீபத்தில் நடந்த பஞ்ச தந்திரம் என்ற டாஸ்க்கில் 5 காயின்கள் வழங்கப்பட்டது என்பதும் அந்த ஐந்து காயின்கள் தாமரை, இசைவாணி, வருண், பாவனி ரெட்டி மற்றும் அபினய் ஆகியோர் கையில்

தாதா சாகேப் பால்கே விருது: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சன்னிலியோன் தமிழ்ப்படம் குறித்த முக்கிய அப்டேட்!

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்தப் படத்தின் டைட்டில் 'ஓ மை கோஸ்ட்'

'தல கோதும் இளங்காத்து: சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்தின் சூப்பர் பாடல்!

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகிய 'ஜெய்பீம்' திரைப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி அன்று அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன்