எல்லை மீறிப் போகும் படுக்கையறை காட்சிகள்: வெப்சீரிஸ்களுக்கு வேட்டு வைக்குமா சென்சார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் தற்போது ஓடிடி மூலம் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களை பொதுமக்கள் பார்த்து வருகின்றனர். குறிப்பாக இளைஞர்களுக்கு என பல வெப்சீரிஸ்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
வெப்சீரிஸ்களுக்கு சென்சார் தேவையில்லை என்பதால் அப்பட்டமான ஆபாச காட்சிகளும் அதில் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக சமீபகாலமாக இந்தி மொழியில் வெளியாகும் வெப்சீரிஸ்களில் படுக்கை அறை காட்சிகள் சர்வசாதாரணமாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கணவர்களால் திருப்தி அடையாத பெண்கள் கள்ளக் காதலர்களுடன் உறவு கொள்வதும், தோழியின் கணவருடன் நெருக்கம் காட்டுவதும், கணவரின் நண்பரிடம் நெருக்கம் காட்டும் பெண்களும், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ரகசியமாக உறவு கொள்ளும் பெண்கள் ஆகியோர்கள் தான் வெப்சீரிஸ்களில் முக்கிய கேரக்டர்களாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வகை வெப்சீரிஸ்களை இளைஞர்கள் தேடிப்பிடித்து பார்த்து வருவதால் இதற்கான பார்வையாளர்களும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு வெப்சீரிஸ் உள்ள காட்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவனால் திருப்தி அடையாத பெண் ஒருவர் தனது கள்ளக் காதலனை வீட்டுக்கு வரவழைத்து படுக்கை அறையில் உறவு கொள்ளுதல் போன்ற காட்சிகள் அந்த வெப்சீரிஸில் உள்ளது. இருவரும் அப்பட்டமாக படுக்கை அறையில் உறவு கொள்ளும் காட்சிகள் நீலப்படங்களுக்கு இணையாக இருப்பதாகவும், ஆபாசத்தின் உச்சமாக இருக்கும் இது போன்ற காட்சியை அனுமதிக்கக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற வெப்சீரிஸ்களுக்கு சென்சார் இல்லையென்றால் கலாச்சார சீர்கேடு ஆகிவிடும் என்றும் பலர் எச்சரிக்கின்றனர். இதனை அடுத்து விரைவில் வெப்சீரிஸ்களுக்கும் சென்சார் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com