உலகம் முழுவதும் கொரோனாவுக்காக உருவாக்கப்பட்ட புதிய மருத்துவமனைகள்!!!
- IndiaGlitz, [Wednesday,April 08 2020]
கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 1 லட்சத்து 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 83 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. பாதிப்புகள் அதிகமானதால் பல நாடுகளில் மருத்துவமனை, மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் என அனைத்திற்கும் தட்டுப்பாடுகள் நிலவிவருகின்றன. இந்நிலைமையை சமாளிக்க பல நாடுகள் புதிதாக மருத்துவமனையை உருவாக்கிவருகிறார்கள். ரயில், விளையாடு அரங்கம், அரசிற்குச் சொந்தமான விருந்து மாளிகைகள் போன்றவை புதிய கொரோனா சிகிச்சை பிரிவுகளாக தற்போது மாற்றப்பட்டு இருக்கிறது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் நோய்த்தொற்று பரவத்தொடங்கியதும் விரைந்து 2 பெரிய மருத்துவமனைகளை உருவாக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1.ஸ்பெயின்- பார்சிலோனாவில் ஃபைரா பார்சிலோனா மாண்ட்ஜுயிக் மையம் தற்போது தற்காலிக மருத்துவமனையாக உருமாற்றப்பட்டுள்ளது.
2.அமெரிக்காவிலும் ஜேக்கப் கே. ஜாவிட்ஸ் கன்வென்ஷன் மருத்துவமனை பெரிய அளவில் தேசிய மையப்பூங்காவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. USTA Bille Jean King National Tennis Center தற்போது 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருக்கிறது. நியூயார்க்கில் USNS Comfort கப்பல் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், லாஸ் ஏஜென்சில் இன்னொரு கப்பலான USNS தற்போது மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்ந்துகொண்டே வருவதால் உள்ளூர் அரங்கங்கள், மாநாட்டு மையங்கள், பூங்காக்கள் போன்றவை மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
3.பிரேசில் சாவ் பாலோவில் உள்ள பாக்கெம்பு மைதானம் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.
4.வாஷிங்கடன் சியாட்டில் Century link நிகழ்வு மையம் தற்போது இராணுவ வீரர்களுக்கான மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
5.சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள விளையாட்டு அரங்கம் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காகத் தற்காலிக மருத்துவமனைகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
6. கிழக்கு லண்டனில் உள்ள எக்ஸ்செல் கண்காட்சி மையம்தான் தற்போது புதிய மருத்துவமனையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு விருந்தினர்களை தங்கவைக்கவும், பொது நிகழ்ச்சிகளை நடத்தவும் பயன்படுத்தப் பட்டு வந்த இந்தக் கட்டடம் தற்போது முழுவதுமாக மருத்துவமனையாக மாறியிருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு NHS Nightingale எனப்பெயரிடப்பட்டுள்ளது.
7.இத்தாலியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனை படுக்கைகள் போதாமை இருந்துவருகிறது. லோம்பார்டியின் ப்ரெசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து பரிசோதனைகளையும் செய்வதற்கு வசதியாக, மருத்துவமனைக்கு வெளியே தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
8. அமெரிக்கா- நியூயார்க் நகரில் உள்ள சென்ட்ரல் பார்க் தற்போது அவசரகால மருத்துவமனையாக உருவாக்கப்ட்டுள்ளது.
9. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இண்டியோவில் தேசிய காவல்படை குடியிருப்பு பகுதி, தற்போது ஒரு தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
10. அர்ஜெண்டினா- அர்ஜெண்டினா ராணுவம் Buenos Aires சிறிய கூடார வடிவில் மருத்துவமனைகளை அமைத்துள்ளது.
11. சீனாவின் வுஹாண் மாகாணத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனை.
12. வாஷிங்டன்- Fredericksburg இல் கொரோனா நோயாளிகள் தங்கது பரிசோதனைக்காகக் காத்திருக்க வேண்டி ஒரு தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இருக்கைகள் எதுவும் இல்லாமல் மருத்துவப் பரிசோதனைக்காக இருக்கைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
13. ஸ்பெயின்- Madrid இல் உள்ள Ifema கண்காட்சி வளாகம் தற்போது மருத்துவமனையாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.
14. Sothern Gaza Strip இல் ஒரு புதிய மருத்துவமனை உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் வான்வழி படம்.
15, ரான்ஸ்- கிழக்கு பிரான்சில் உள்ள Mulhouse தற்போது தற்காலிக மருத்துவமனையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
16. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்த வசதியாக நியூயார்க்கில் USNS கப்பல் மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
17. இந்தியா- ஹவுரா நகராட்சியின் தற்போது ஹவுராவின் துமுர்ஜாலா ஸ்டேடியம் தற்போது 150 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டு இருக்கிறது.
18. இந்தியா – இந்தியப்போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பயணிகள் இரயில் தற்போது தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.