அதிமுகவில் மேலும் ஒரு புதிய அணி: எடப்பாடியார் ஆட்சி நீடிக்குமா?

  • IndiaGlitz, [Tuesday,May 02 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி-ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இந்த நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற பின்னர் சசிகலா அணி தினகரன் அணியாக மாறியது. தற்போது தினகரன் சிறைக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி அணியாக உள்ளது.

ஒருபக்கம் எடப்பாடியார் அணியும் ஓபிஎஸ் அணியும் ஒன்றிணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடியார் அணியில் இருந்து 13 எம்.எல்.ஏக்கள் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் தனியாக பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மிக விரைவில் தோப்பு வெங்கடாச்சலம் முக்கிய முடிவை அறிவிப்பார் என்று கொங்கு மாவட்ட அதிமுகவினர் கூறிவருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட தலித் எம்.எல்.ஏக்கள் தனி அணியாக பிரியவிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சசிகலாவின் உறவினர் விவேக் தலைமையேற்க வேண்டும் என்று ஒரு குரூப்பும், டாக்டர் வெங்கடேஷ் தலைமை ஏற்க வேண்டும் என்று இன்னொரு குரூப்பும் கிளம்பியுள்ளது.

போகிற போக்கை பார்த்தால் அதிமுக சிதறு தேங்காய் போல பல அணியாக உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், அதற்குள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஒரு சிறந்த முடிவை ஈகோ இல்லாமல் எடுக்க வேண்டும் என்றும் உண்மையான அதிமுகவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.