உன் தங்கச்சிய தூக்கிட்டு போவோன்: சவால் விட்ட இளைஞரின் துண்டான தலை!

  • IndiaGlitz, [Thursday,November 28 2019]

நெல்லையில் 19 வயது வான்மதி என்ற பெண்ணை, நம்பிராஜன் என்ற 23 வயது வாலிபர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வான்மதியின் சகோதரர் மற்றும் அவருடைய நண்பர்கள் நம்பிராஜனை வெட்டிக் கொலை செய்துவிட்டு பிணத்தை தண்டவாளத்தில் தூக்கி போட்டு விட்ட செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கொலைகாரர்களை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி மற்றும் உறவினர்கள் உள்பட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் வாக்குமூலம் வாங்கினர். வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி கொடுத்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நம்பிராஜன் மீதும் அவருடைய குடும்பத்தின் மீதும் ஏற்கனவே அதிக வழக்குகள் உள்ளது. அவர்கள் குடும்பத்திற்கும் எங்களது குடும்பத்திற்கும் நீண்ட நாள் பகை. இந்த நிலையில் என் தங்கை வான்மதி பின்னால் நம்பிராஜன் சுற்றி வந்ததால் நான் எனது நண்பர்களை அழைத்துச் சென்று அவனை எச்சரித்ததேன். ஆனால் அவனோ ’உன் தங்கச்சியை தூக்கிட்டு போய் கல்யாணம் செய்து காட்டுகிறேன்’ என்று சவால் விட்டான். அப்படி நடந்தால் உன் தலையை எடுத்துவிடுவேன்’ என்று நானும் அவனை எச்சரித்தேன்

எனது தங்கையிடமும் அந்த நம்பிராஜன் உடன் காதல் வேண்டாம், இந்த திருமணம் நடக்காது என்றும், உன் மனதை மாற்றிக் கொள் என்றும் அறிவுறுத்தினே. ஆனால் திடீரென நம்பிராஜன் சவால் விட்டபடியே எனது தங்கையை அழைத்துக்கொண்டு போய் திருமணம் செய்து விட்டான்.

இதனால் ஆத்திரமடைந்து என் நண்பர்களுடன் சேர்ந்து நம்பிராஜன் கொலை செய்துவிட்டு, பிணத்தை ரயில் தண்டவாளத்தில் தூக்கி போட்டு விட்டேன்’ என்று செல்லச்சாமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட செல்லச்சாமி உள்பட 5 பேர்களையும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்

More News

ஷாப்பிங் அழைத்து செல்ல மறுத்த காதலன் மீது ஆசிட் வீசிய காதலி

தன்னுடன் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், அடிக்கடி ஷாப்பிங் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் காதலி வலியுறுத்திய நிலையில் அதற்கு மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம்

30ஆம் தேதிக்கு மேல் 'வச்சு செய்யப்போகுது மழை': தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில் இதெல்லாம் ஒரு மழையே இல்லை, இனிமேல் தான் சென்னைக்கு பலத்த மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கல்லா பெட்டியில் கைவைக்காமல் வெங்காயத்தை மட்டும் திருடிய திருடர்கள்

நகைக் கடைகளில் திருடுபவர்கள் கல்லாப்பெட்டியை கண்டுகொள்ளாமல் தங்கம் மற்றும் வைர நகைகளை திருடுவதில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

கமல்ஹாசன் சிகிச்சை குறித்து மக்கள் நீதி மய்யம் முக்கிய அறிவிப்பு!

உலக நாயகனும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய வீட்டில் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்ததால்

கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருந்த நிலையில் நேற்று இரவு சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது