திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை: தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Tuesday,September 08 2020]

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் தற்போது மத்திய அரசு திரையரங்க உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூக தீர்வு ஏற்பட்டால் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் திரையரங்குகள் திறந்தாலும் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என்று தயாரிப்பாளர்கள் திடீரென போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கியூப் கட்டணத்தை செலுத்த முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு 51 தயாரிப்பாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். இதனை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

எனவே திரையரங்குகள் திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்தாலும், புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

More News

போதை பொருள் வழக்கில் மேலும் ஒரு பிரபல நடிகை கைது!

போதைப்பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரபல நடிகை ராகினி திவேதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்

தமிழகத்தில் மின்னணு, ஹார்டுவேர் உற்பத்தியை அதிகரிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி திட்டம்!!!

தமிழகத்தில் மின்னணு மற்றும் ஹார்டுவேர் உற்பத்தியைத் அதிகப்படுத்த தமிழக அரசு அதிரடி திட்டத்தை மேற்கொண்டு இருக்கிறது

அடுத்த ரவுண்டுக்கு தயாராகுங்கள்: உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சீனா உள்பட ஒரு சில நாடுகளிலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே அச்சுறுத்தி வருகிறது.

பாடகர் எஸ்பிபிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: தமிழக அரசு உதவுமா?

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

பிரபல தமிழ் நடிகரின் மறைவுக்கு ஆந்திர முதல்வர் இரங்கல்!

தமிழ், தெலுங்கு நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரான ஜெயப்பிரகாஷ் ரெட்டி இன்று காலமானார். அவருக்கு வயது 74